லிப்டில் சிக்கிய ராஜ்நாத் சிங்... சினிமா பாணியில் மேற்கூரை வழியாக தூக்கினர்!!
டெல்லி: டெல்லியில் அரசு விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பழுதான லிப்டுக்குள் சிக்கிக் கொண்டார். பின்னர் அவர் மேற்கூரை வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.
தெற்கு டெல்லியில் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படை தலைமையகத்தில் 'ஷவ்ரியா திவாஸ்' என்ற அரசு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றிருந்தார்.

சி.ஆர்.பி.எப். படைப்பிரிவு டைரக்டர் ஜெனரல் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு ஆகியோருடன் ராஜ்நாத் சிங், லிப்டில் மேல் மாடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென லிப்ட் இயங்காமல் நின்றது. இதையடுத்து லிப்டில் இருந்த அலாரமை அவர்கள் அழுத்தி ஒலிக்க செய்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், லிப்டில் சிக்கி இருந்த மூன்று பேரையும் ஒருவர் பின் ஒருவராக மேற்கூரை வழியாக மீட்டனர். இதில் கடைசி நபராக ராஜ்நாத் சிங் லிப்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்தத் தகவலை, தான் கலந்து கொண்ட விழாவில் ராஜ்நாத் சிங்கே சுவாரஸ்யமாக தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications