வரதட்சணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற வாட்ச்மேன் - ஒடிசாவில் பயங்கரம்!
புவனேஷ்வர்: ஒடிசாவில் வாட்ச்மேன் ஒருவர் தனது மனைவியை வரதட்சணைக்காக உயிரோடு எரித்துக் கொன்ற குற்றத்திற்காக பெற்றோருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின், பனிகிரகி நகர் பெர்ஹம்பூர் நகரைச் சேர்ந்த லக்ஷ்மி நாராயணன் சாகு என்கின்ற அந்த வாட்ச்மேன் தன்னுடைய தாய், தந்தையரான ரபீந்த்ரா மற்றும் லக்ஷ்மி குமாரியுடன் இணைந்து தனது மனைவி புஷ்பாஞ்சலியை வரதட்சிணைக்காக கொடுமைப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் அவர் கொடுமையின் உட்சமாக தனது மனைவியை உயிரோடு எரித்துக் கொலை செய்துள்ளார். அவருடைய வீட்டிலிருந்து மண்ணெண்ணெய் கேன் மற்றும் எரிந்த நிலையிலான உடைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புஷ்பாஞ்சலியின் தந்தையான ராஜேந்திர பிரசாத் சாகு கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய படா பஜார் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். மூவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருவதாக காவல்துறை அதிகாரி ஏ.கே.மோகண்டி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மற்றும் புவனேஷ்வரில் வரதட்சிணைக்காக பெண்கள் கொலை செய்யப்படுவது, கொடுமை படுத்தப்படுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications