தேனிலவு கொண்டாடியவர்களால் தான் கேதர்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டது: ஸ்வரூபானந்த சரஸ்வதி
மும்பை: கேதர்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டு 5 ஆயிரம் யாத்ரீகர்கள் பலியாக புனித ஸ்தலங்களுக்கு தேனிலவு மற்றும் சுற்றுலா வருபவர்கள் தான் காரணம் என சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத்தில் கடந்த 2013ம் ஆண்டு திடீர் என்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த 5 ஆயிரம் பேர் பலியாகினர். இந்நிலையில் இது குறித்து துவாரகா பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டியின்போது அவர் கூறுகையில்,
ஜாலியாக இருக்க, சுற்றுலாவுக்கு, தேனிலவுக்கு மக்கள் புனிதஸ்தலங்களுக்கு செல்கிறார்கள். இதனால் தான் கேதர்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டது. புனித ஸ்தலங்களுக்கு தேனிலவு, சுற்றுலா செல்வதை நிறுத்தாவிட்டால் இது போன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நடக்கலாம் என்றார்.
முன்னதாக அவர் சனி பகவான் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தது பற்றி கூறுகையில், சனி பகவான் கோவிலுக்குள் பெண்கள் சென்றதால் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications