உ.பி.: தண்டவாளம் அருகே பிணமாக கிடந்த இளம்ஜோடி- கௌரவக் கொலையா?
முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலத்தில் ரயில் தண்டவாளம் அருகே ஒரு இளம் ஜோடியின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் விவேக் குமார்(22). அவர் அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமையில் இருந்து அவரை காணவில்லை. அவரது பெற்றோரும், உறவினர்களும் அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இந்நிலையில் விவேக் குமார் மற்றும் 20 வயது பெண் ஒருவர் தவ்ராலா ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
விவேக் மற்றும் அந்த பெண் காதலித்திருப்பார்கள் என்று தெரிகிறது. இது கௌரவக் கொலையாக இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications