Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ககன்யான் மிஷன்.." அந்த 4 பேர் தேர்வு செய்யப்பட்டது எப்படி! அவர்களுக்கு இவ்வளவு கஷ்டமான பயிற்சிகளா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரோவின் ககன்யான் மிஷன் மூலம் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களின் பெயர்களைப் பிரதமர் மோடி அறிவித்த நிலையில், அவர்கள் எப்படி தேர்வு செய்யப்பட்டார்கள்.. அவர்கள் எந்தெந்த பயிற்சிகளை மேற்கொண்டார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தியாவின் இஸ்ரோ பல்வேறு திட்டங்களை இஸ்ரோ வெற்றிகரமாக முடித்துக் காட்டியுள்ளது. அதிலும் மிகக் குறைந்த செலவில் பல சிக்கலான திட்டங்களைக் கூட இஸ்ரோ வெற்றிகரமாக முடித்துள்ளது.

How 4 IAF pilots were selected to Gaganyaan mission and what is their training


சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலவின் தெற்கு பகுதியில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையை அது படைத்து இருந்தது. இப்போது சந்திரயானுக்குப் பிறகு ககன்யான் திட்டத்தில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது.

அந்த 4 பேர்: இத்திட்டத்திற்குப் பல ஆண்டுகளாக இஸ்ரோ வேலை செய்து வந்த நிலையில், இன்று இத்திட்டத்தில் விண்வெளி செல்லும் வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாணடர் சுபான்சு சுக்லா ஆகியோர் தான் ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்குச் செல்ல உள்ளனர்.

இந்த 4 பேரும் அவர்கள் எப்படித் தேர்வு செய்யப்பட்டார்கள்.. அவர்கள் எந்தெந்த பயிற்சிகளை மேற்கொண்டார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்தத் திட்டத்திற்கு இந்திய விமானப் படையைச் சேர்ந்த வீரர்களை அனுப்பலாம் என்று இஸ்ரோ முதலில் கடந்த 2019 ஜூலை மாதம் முடிவு செய்தது.

தேர்வு செய்யப்பட்டது எப்படி: இந்தியாவின் முதல் விண்வெளி மிஷனுக்கு இந்திய விமான படையின் விமானிகள் சரியாக இருப்பார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. திடீரென எதாவது தவறு நடந்தால் என்ன செய்யலாம் என்பதை நொடியில் முடிவெடுப்பார்கள் என்பதால் அவர்கள் சரியாக இருப்பார்கள் என்று இஸ்ரோ தேர்வு செய்தது. அதிவேகத்தில் போர் விமானங்களை இயக்கும் அனுபவம் அவர்களுக்கு பிளஸ்ஸாக அமைந்தது.

இந்த அறிவிப்பு வந்ததும் இந்திய விமான படையைச் சேர்ந்த பல விமானிகள், விண்வெளி வீரர்களாக மாற பதிவு செய்தனர். அவர்களுக்கு முதற்கட்ட சோதனையிலேயே பல டெஸ்கள் நடத்தப்பட்டன. செப்டம்பர் 2019இல் முதற்கட்ட தேர்வு முடிந்த நிலையில், அதில் 12 பேர் தேர்வைக் கடந்தனர். இந்திய விமானப்படையின் கீழ் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஏரோஸ்பேஸ் மெடிசின் அவர்களைத் தேர்வு செய்தது.

ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்லும் 4 இந்திய வீரர்கள்.. அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி.. பின்னணி


கடுமையான பயிற்சி: அந்த 12 பேருக்கும் பல்வேறு தொடர் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வுகளின் இறுதியில் ஐஏஎம் மற்றும் இஸ்ரோ இணைந்து இந்த நான்கு பேரைத் தேர்வு செய்தனர். 2019இல் ஆரம்பித்த விண்வெளி வீரர்களைத் தேடும் பணிகள் 2020இல் முடிந்துவிட்டது. ஆனால், விண்வெளி மிஷனில் தேர்வு செய்யப்பட்டவர்கள் யார் என்பதை இஸ்ரோ வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அவர்கள் தங்கள் விண்வெளி பயணத்திற்கான பயிற்சியை ஆரம்பித்தார்கள். முதற்கட்ட பயிற்சிக்காக அவர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டனர். இடையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்கள் பயிற்சி கொஞ்சம் தாமதமானது. அதன் பின்னர், அந்த 4 பேரும் இந்தியாவில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயிற்சிகளுக்காக ஆயுதப் படைகள் உட்பட பல நிறுவனங்களுடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது. கடலுக்கு அடியிலும் சென்று அவர்கள் பயிற்சி பெற்றனர்.

இஸ்ரோ தனது மிஷனுக்காக இவர்களுக்கு சிமுலேட்டர்கள் மூலமாகவும் பயிற்சி அளித்தது. இந்த பயிற்சி ஒரு பக்கம் செல்ல அவர்கள் ஃபிட்டா இருக்க கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். அதேபோல இஸ்ரோ தரப்பிலும் தொடர்ச்சியாக பல்வேறு ராக்கெட்களை ககன்யான் திட்ட டெஸ்டிங்கிற்காக அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+