நாயுடுவை விடுங்க.. 10 நாளில் 1.7 கோடி சம்பாதித்த 9 வயது பேரனை தெரியுமா? அடேங்கப்பா -கொட்டும் பணமழை
அமராவதி: நடந்து முடிந்த ஆந்திர பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது. இதையடுது்து சந்திரபாபு நாயுடு 4வது முறையாக நேற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் தான் அவரது 9 வயது பேரன் வீட்டில் இருந்தபடியே ஒன்றும் செய்யாமல் 10 நாளில் 1.70 கோடி சம்பாதித்துள்ளார். இது எப்படி சாத்தியமானது? வாங்க பார்க்கலாம்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருந்தார். இந்நிலையில் தான் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆந்திராவை பொறுத்தவரை மொத்தம் 175 தொகுதிகள் உள்ளன. இதில் 88 இடங்களில் வெல்லும் கட்சியால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும்.

இந்த தேர்தலில் தனித்து களமிறங்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிகளை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வீழ்த்தியது. தெலுங்கு தேசம் கட்சியானது நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து இந்த வெற்றியை பெற்றது.
கடந்த 4ம் தேதி வெளியான தேர்தல் முடிவில் மாநிலத்தில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி 164 இடங்களை வென்றது. கட்சி வாரியாக பார்த்தால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றியது. பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. மொத்தமாக இந்த கூட்டணி 164 இடங்களில் வென்று அசத்தியது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று 4வது முறையாக சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். அவரது மகன் லோகேஷ் அமைச்சராகி உள்ளார்.
கடந்த 2019 சட்டசபை தேர்தலின்போது சந்திரபாபு நாயுடுவின் கட்சி படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு இறுதியில் திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இப்படி கடந்த 5 ஆண்டுகளாக அவரும், அவரது குடும்பமும் பெரும் சோதனைகளை எதிர்கொண்ட நிலையில் இந்த தேர்தல் முடிவு என்பது அவர்களின் குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆட்சி அதிகாரம் மட்டுமின்றி அவரது குடும்பத்துக்கு பணத்தையும் தேர்தல் வெற்றி கொட்டிக்கொடுக்கிறது.
அதாவது சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினரின் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு என்பது கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் கட்சி வெற்றி பெற்ற கடந்த 4ம் தேதியில் இருந்து ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் என்பது சர்ரென உயர்ந்தன. இந்த நிறுவனம் என்பது மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி தயிர், நெய், பனீர் உள்ளிட்டவை தொடர்பான விற்பனையில் இந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் 11 மாநிலங்களில் 1.50 கோடி குடும்பங்கள் ஹெரிடேஜ் வாடிக்கையாளர்களாக உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்திடம் 34 சதவீத பங்குகள் உள்ளன.
1992ல் தொடங்கப்பட்ட ஹெரிடேஜ் நிறுவனத்தில் சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரிக்கு 24.37 சதவீத பங்குகளும், மகன் லோகேஷுக்கு 10.82 சதவீத பங்குகளும், மருமகள் பிராமணிக்கு 0.46 சதவீத பங்குகளும், 9 வயது பேரன் தேவன்ஷுக்கு 0.06 சதவீத பங்குகளும் உள்ளன. இந்நிலையில் தான் சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஹெரிடேஜ் பங்குகளின் விலை அதிகரித்தது. இதன்மூலம் பேரன் தேவன்ஷ் வைத்திருக்கும் 56,075 பங்குகளின் மதிப்பு ஜூன் 3ல் ரூ.2.4 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது அதன் மதிப்பு என்பது ரூ.4.1 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் 9 வயது நிரம்பிய தேவன்ஷுக்கு பங்கு சந்தை மூலம் மூலமாக ரூ.1.7 கோடி லாபம் கிடைத்துள்ளது.
அதுமட்டுமின்றி ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு மதிப்பு மும்பை பங்கு சந்தையில் 52 வார அதிகபட்சமாக ரூ.727.9-ஐ எட்டியது. இதனால் சந்திரபாபு நாயுடுவின் குடும்பம் ரூ.1,225 கோடி லாபம்ஈட்டியுள்ளது என்பது இன்னொரு கவனிக்கத்த விஷயமாகும். .இதன்மூலம சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு ஒரே நேரத்தில் ஆந்திராவில் அதிகார பலம் கிடைத்துள்ளதோடு, பணமும் குவிந்து வருகிறது. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கின் விலை இப்படி கிடுகிடுவென உயர்வதற்கு ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு பெற்ற வெற்றி மட்டும் காரணமல்ல. அதோடு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.
அதாவது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மத்தியில் யாருக்கும் ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளில் வெற்றி கிடைக்கவில்லை. பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுது்து பாஜக சந்திரபாபு நாயுடுவின் 16 எம்பிக்கள் உள்பட கூட்டணி கட்சிகளின் எம்பிக்களின் ஆதரவில் மத்தியில் ஆட்சியை பிடித்தது. தற்போதைய சூழலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிக்களின் சப்போர்ட் என்பது மத்திய பாஜக அரசுக்கு மிகவும் முக்கியமாகும். இதுவும் அவரது குடும்பத்தின் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு உயர்வதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications