ஜெய் ஸ்ரீராம் அல்ல.. ஜெய் ஜெகநாத் ஒன்லி.. ஒடிஷாவின் அசைக்கவே முடியாத முடிசூடா மன்னன் நவீன் பட்நாயக்!
புவனேஸ்வர்: ஒடிஷாவில் மாநில சட்டசபை தேர்தலும் லோக்சபா தேர்தலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிஷாவின் அசைக்க முடியாத பெருந்தலைவராக தொடர்ந்தும் முதல்வர் நவீன் பட்நாயக் கொடிதான் பறந்து வருகிறது.
நாட்டின் கிழக்கு கடலோர மாநிலங்களில் ஒடிஷா மிகவும் முக்கியமானது. ஒடிஷா மாநில சட்டசபை தேர்தல் மே 13-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறுகிறது. ஒடிஷாவில் மொத்தம் 147 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 74 இடங்கள்.

சட்டசபை தேர்தல்: ஒடிஷாவைப் பொறுத்தவரையில் ஆளும் பிஜூ ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் களத்தில் உள்ளன. ஒடிஷாவில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஆளும் பிஜூ ஜனதா தளம் வெற்றி பெற்று வருகிறது. முதல்வராக நவீன் பட்நாயக் இருந்து வருகிறார். நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக் இந்தியாவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். 2-வது உலக யுத்த காலங்களில் பிஜூ பட்நாயக்கின் பங்களிப்பு சரித்திர பக்கங்களில் இடம் பிடித்திருக்கிறது. 2014-ம் ஆண்டு ஒடிஷா சட்டசபை தேர்தலில் 117 இடங்களில் வென்றது பிஜூ ஜனதா தளம். 2019-ல் 112 இடங்களில் வென்றார் நவீன் பட்நாயக். 1997-ம் ஆண்டு முதல் பிஜூ ஜனதா தளத்தின் தலைவராக தொடர்ந்து அசைக்க முடியாத சக்தியாக, ஆளுமையாக திகழ்கிறார் நவீன் பட்நாயக். தற்போதைய ஒடிஷா சட்டசபை தேர்தலிலும் மீண்டும் பிஜூ ஜனதா தளமே வென்று நவீன் பட்நாயக் முதல்வராவார் என்கின்றன கருத்து கணிப்புகள்.
லோக்சபா தேர்தல்: ஒடிஷாவில் மொத்தம் 21 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 12 தொகுதிகளில் பிஜூ ஜனதா தளம் வென்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 8 இடங்களைக் கைப்பற்றியது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் பெரும்பாலும் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமே அதிக இடங்களைக் கைப்பற்றும்; பாஜக அடுத்ததாக கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன. எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி பக்கம் போகாமலும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையாமலும் தனித்த சக்தியாக இருந்து வருகிறார் நவீன் பட்நாயக்.
நவீன் மேஜிக் என்ன?: ஒடிஷா மற்ற மாநிலங்களைவிட பல்வேறு வகைகளில் வேறுபட்டது. ஒடிஷாவில் பெரும்பான்மையான மக்கள் ஆதி பழங்குடிகள். நாடு விடுதலை அடைந்த பின்னரும் சாலை, மின்சாரம் என அடிப்படை வசதிகள் கூட எட்டிப்பார்க்காத ஏராளமான மலை கிராமங்களைக் கொண்டதாக இருந்தது ஒடிஷா. ஆனால் தமது ஆட்சிக் காலத்தில் ஒடிஷாவை நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக்குவதற்கு அயராத உழைப்பைக் கொடுத்தவர் நவீன் பட்நாயக். ஒடிஷாவின் அடிப்படை உள் கட்டமைப்புகள்,தொழில் துறை வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்கள் என அத்தனையிலும் ஆழ்ந்த கவனத்தை செலுத்தியதால்தான் எத்தனை மோடி அலைகள் வந்தாலும் ஒடிஷாவை புரட்டிப் போடுவது இல்லை.
ராமர் vs ஜெகநாத்: அயோத்தியில் ராமர் கோவிலை கட்டினாலும் கூட பாஜகவின் ஜெய் ஸ்ரீராம் முழக்கம், ஒடிஷாவின் ஜெய் ஜெகநாத் எனும் சரண கோஷத்திடம் எடுபடாமல் போய்விடுகிறது. பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலயம், அயோத்தி ராமர் கோவிலுக்கு இணையானதாக அம்மக்களால் வழிபடப்படுகிறது. பாஜக அயோத்தி ராமர் கோவிலுக்கு தரும் முக்கியத்துவத்தை விட கூடுதலாக பூரி ஜெகநாதர் கோவிலுக்கு தருகிறார் முதல்வர் நவீன் பட்நாயக். அயோத்தி ராமர் கோவில் திறப்புக்கு முன்னதாக பூரி ஜெகநாதர் கோவில் வழித்தட திட்டத்தை செயல்படுத்திக் காட்டினார் நவீன் பட்நாயக். இது பூரி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் தாக்கத்தையும் நவீன் பட்நாயக் மீதான அசைக்க முடியாத பெரும் நம்பிக்கையையும் சாமானியர்களிடம் உருவாக்கி இருக்கிறது.
என்ன செய்தார் நவீன் பட்நாயக்?: கிராம பஞ்சாயத்து அதிகாரங்களில் பெண்களை அமர வைத்தது, லட்சக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி பொருளாதார மேம்பாட்டுக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தது, கல்வி, சுகாதாரம் , விளையாட்டுத்துறை, தொழில்துறை என ஒவ்வொன்றிலும் அங்குலம் அங்குலமாக கவனமெடுத்து செதுக்கிக் கொண்டிருப்பதாலேயே ஒடிஷாவின் அசைக்க முடியாத ஆகப் பெரும் தலைவராக திகழ்கிறார் நவீன் பட்நாயக் என்பது மிகை அல்ல. 33% பெண்கள் இடஒதுக்கீட்டைப் பேசுகிற காலத்தில் ஒடிஷாவின் உள்ளாட்சி அமைப்புகளில் 70% பெண்களை தலைவர்களாக்கி அதிகாரத்தை அடிமட்டத்துக்கும் கொண்டு சேர்த்தவர் நவீன் பட்நாயக். ஒடிஷா உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றிய ஒரே கட்சியாக பிஜூ ஜனதா தளம் உருவெடுத்தது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு என தனித்துறையையே உருவாக்கியவர் முதல்வர் நவீன் பட்நாயக். ஜாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு ரூ2.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என சமூக நீதிப் புரட்சித் திட்டத்தை செயல்படுத்தியவர் நவீன் பட்நாயக். ஒடிஷாவில் நவீன் செயல்படுத்திய 5T- echnology, Teamwork, Transparency, Time and Transformation எனும் அரசு நிர்வாக கட்டமைப்பை முறைப்படுத்துகிற முன்னேற்ற பார்முலா மிக முக்கியமானது. இதனை செயல்படுத்திய பெருமைக்குரியவர் தமிழரான விகே பாண்டியன்... இவர்தான் நவீன் பட்நாயக்கின் வலது கரமும் அடுத்த அரசியல் வாரிசுமாவார். பிஜு ஸ்வஸ்திய கல்யாண் யோஜனா திட்டம் மூலம் 3.3 கோடி பேருக்கு மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 1 கோடி குடும்பங்கள் வெளி மாநிலங்களிலும் சிகிச்சை பெற வகை செய்கிறது இந்த மருத்துவ அட்டைகள். இத்தகைய திட்டங்களும் பயன்களும்தான் ஒடிஷாவின் மாநில சட்டசபை தேர்தலிலும் லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கப் போகும் முடிவாகும் இருக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications