"சாமி" யார்னு தெரியுதா.. அதே மிர்ச்சி பாபாதான்.. "தீர்த்தம்" தந்தே பெண்ணை சீரழித்து.. இப்ப ஜெயிலில்
சாமியார் மிர்ச்சி பாபா, பெண்ணை பலாத்காரம் செய்த புகாரில் கைதானார்
போபால்: குழந்தை பாக்கியம் வேண்டி, சாமியாரை நாடி சென்றுள்ளார் ஒரு இளம்பெண்.. ஆனால், அந்த சாமியார் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.
வைராக்கிய ஆனந்த் கிரி என்று அந்த சாமியாருக்கு பெயர்.. மிர்ச்சி பாபா என்றும் அழைப்பார்கள்.. மத்திய பிரதேச மாநிலத்தில் இவர் மிகவும் பிரபலம்..
தேர்தலில் திக் விஜய் சிங்கிற்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்தார்.. அப்போதுதான் இவர் பிரபலம் அடைந்தார்.. சுற்றுவட்டார மக்கள் இவரை தேடி வந்து பிரச்சனைகளை சொல்லி, ஆசி வாங்கி செல்வது வழக்கம்.

பரிகாரம்
இந்நிலையில், இவரை தேடிஒரு இளம்பெண் வந்துள்ளர்.. தனக்கு குழந்தை இல்லை என்றும், குழந்தை வரம் கிடைக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்றும் கேட்டுள்ளார்.. அதற்கு மிர்ச்சி பாபா சாமியார், நானே அந்த பரிகாரத்தை செய்கிறேன், இந்த தீர்த்தத்தை மட்டும் குடித்தால் போதும் என்று சொல்லிவிட்டு மயக்க மருந்து கலந்த பானத்தை கொடுத்திருக்கிறார். அதை குடித்ததும் அந்த பெண் மயங்கி அங்கேயே விழுந்துள்ளார்.. உடனே அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் மிர்ச்சி பாபா...

மிர்ச்சி பாபா
மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து சாமியாரை ஆத்திரத்தில் திட்டி உள்ளார்.. ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.. ஆனால், சாமியார் டென்ஷன ஆகவில்லையாம்... நடந்த விஷயத்தை பற்றி வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.. கொலை மிரட்டல் விடுத்தபோதும், அந்த பெண் துணிச்சலுடன் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் மிர்ச்சி பாபா குவாலியரில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.. பிறகு, போபாலுக்கு கொண்டு வரப்பட்டு அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

தீர்த்தம்
எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டம் 376, 506 மற்றும் 342 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் இதுபற்றி சொல்லும்போது, சாமியார் மிர்ச்சி பாபா இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்... ஆனால், அவர் எனக்கு போதைப் பொருள் தந்துவிட்டார்.. அதை சாப்பிட்டதும் மயங்கி விழுந்துவிட்டேன் என்று அழுதபடியே சொல்கிறார்.. அதேபோல, இந்த சம்பவம் குறித்து கூடுதல் டிசிபி சௌபே சொன்னதாவது:

மிர்ச்சி பாபா
"உதவி கேட்டு அந்த பெண் சென்றதுமே, மிர்ச்சி பாபா அந்த பெண்ணின் மொத்த விவரங்களையும் எடுத்துக் கொண்டுள்ளார்.. பிறகுதான், தீர்த்தம் வழங்கி, அவரை சாப்பிட வைத்துள்ளார்.. இதையடுத்து, மிர்ச்சி பாபா அந்த பெண்ணை வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணிடம் சம்பவத்தை யாரிடமும் வெளிப்படுத்தினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டினார்.. இதனால் பயந்து போன அப்பெண், வீட்டுக்கு வந்து நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லவில்லை...

ஹோட்டலில் சாமியார்
சில நாட்களுக்கு முன்பு, தெரிந்த ஒருவரிடம் நடந்த சம்பவங்களை பகிர்ந்து கொண்டபோது, அவரது கணவர் காதுக்கு விஷயம் சென்றுவிட்டது.. இதனால், அதிர்ச்சி அடைந்த கணவன், இத்தனை நாள் இந்த விஷயத்தை மறைத்து வைத்த கோபத்தில், அந்த பெண்ணை கைவிட்டுவிட்டார்... இதனால் நிலைகுலைந்து போன அந்த பெண், அவருடைய அண்ணன் வீட்டில்தான் தங்கியிருந்தார்.. குடும்பம் பிரிந்துவிடும் நிலைமைக்கு சென்றதால்தான், வேறு வழியில்லாமல் போலீசுக்கு வந்து புகார் தந்தார். குவாலியரில் உள்ள ஒரு ஹோட்டலில்தான் சாமியார் தங்கியிருந்தார்.. அங்கேயே அவரை சுற்றி வளைத்து கைது செய்தோம்.. விசாரணை நடக்கிறது" என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications