வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வெற்றி எப்படி இருக்கிறது?... இன்று தெரியும் ரிசல்ட்!
வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் வெற்றி எப்படி இருக்கிறது என்று இன்றைய வாக்கு எண்ணிக்கை தெளிவுபடுத்தும்.
Recommended Video

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் கை ஓங்கியுள்ளதா என்பதை இன்று நடைபெறும் நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெளிவுபடுத்தும்.
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு மாநிலங்களில் பாஜகவின் பலம் கூடி இருக்கிறது. இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 19 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பாஜக ஆட்சியை கைபற்றியுள்ளது.
அண்மைக்காலமாக வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அசாம், மணிப்பூர், அருணாசலபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியை அக்கட்சி கைப்பற்றியது.

தேசியவாத காங். ஆட்சியை பிடிக்கலாம்
தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ள நாகாலாந்து, மேகாலயா, திரிபுராவில் பா.ஜனதாவும் அதன் கூட்டணியும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் பா.ஜனதாவுடன் போட்டி நிலவுகிறது. எனினும் தேசியவாத காங்கிரஸ் இந்த முறை ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

மார்க்சிஸ்ட் பாஜக இடையே போட்டி
திரிபுராவில் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு இம்முறை பா.ஜனதா கடும் சவாலாக திகழ்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் திரிபுராவில் பாஜக தனது கூட்டணி கட்சியான ஐபிஎஃப்டியுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றும் என்று கணித்துள்ளன. ஆனால் ஒரு சில கருத்துக்கணிப்புகள் மார்க்சிஸ்ட் கட்சி தனது ஆட்சியை தக்க வைக்கும் என்றும் கூறுகின்றன.

நாகாலாந்து யார் யாருக்கு இடையே போட்டி?
நாகாலாந்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணிக்கும், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைமையில் அமைந்த பா.ஜனதா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. 1963-ம் ஆண்டு முதல் இந்த மாநிலத்தில் 3 முதல்வர்களை தந்த காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

11 மணிக்குள் தெரிந்து விடும்
விரைவில் கர்நாடகா சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் இன்று நடைபெறும் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கையானது தொடங்குகிறது 3 மாநில சட்டசபை தொகுதிகளும் குறைவான வாக்காளர்களை கொண்டவை என்பதால் பகல் 11 மணிக்கு உள்ளாகவே இறுதி நிலவரம் தெரிய வந்துவிடும் என்று கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications