”இது பரிசா வந்தது... வெறும் 14 லட்ச ரூபாய்தான்” - வாட்ச் சர்ச்சைக்கு சித்தராமையா பதில்
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையா கையில் கட்டியிருந்த கடிகாரத்தினால் ஏற்பட்ட சர்ச்சையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அது பரிசுப் பொருள்தான் என்பதை உறுதிப் படுத்தி சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் அவர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கையில் சமீப காலமாக வித்தியாசமான கடிகாரம் காணப்பட்டது.

டிஜிட்டல் கடிகாரங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில் பழங்கால கடிகாரம் போல் பெரிதாக இருந்தது.
மழுப்பிய சித்தராமையா:
இந்த புதிய கடிகாரத்துடனேயே அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கடிகாரம் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளிக்காமல் மழுப்பி விட்டார். இதனால் சித்தராமையா கையில் விலை மதிப்புள்ள கடிகாரம் என படத்துடன் செய்தி வெளியானது.
வைரம் இருப்பதாக புரளி:
இந்த கடிகாரத்தின் மதிப்பு ரூபாய் 75 லட்சம் என்றும் அதில் வைரம் இருப்பதாகவும் கூறப்பட்டது. எனவே இந்த கடிகாரம் குறித்து சித்தராமையா விளக்கமும் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. ஆனால் எதற்குமே பதில் அளிக்காமல் சித்தராமையா மவுனம் காத்து வந்தார்.
14 லட்சமாம் விலை:
இந்நிலையில் தான் அவர் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் அந்த கடிகாரத்தினை துபாயில் வசிக்கும் டாக்டர் வர்மாவிடம் இருந்து ரூபாய் 14 லட்சத்துக்கு வாங்கியதாகவும், இதற்கு வருமான வரி செலுத்தி லோக் ஆயுக்தாவிடம் விவரம் தாக்கல் செய்து இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மாநில அரசிடம் ஒப்படைப்பு:
மேலும் இது பரிசுப் பொருள் என்பதால் அதற்கான வரியானது மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications