ஒடிஷாவின் கோரபுட் மாவட்டத்தை துவம்சம் செய்த ஹூட்ஹூட் புயல்! தொடர்ந்து இருளில் மூழ்கும் நகரங்கள்!!
கோரபுட்: விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்த ஹூட் ஹூட் புயல் ஒடிஷாவின் எல்லை மாவட்டமான கோரபுட்டையும் மிக மோசமாகத் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஹூட் ஹூட் புயல் கடந்த ஞாயிறன்று விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. மணிக்கு 190 கி,மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியபடி விசாகப்பட்டினத்தை தாக்கி இப்புயல் அந்நகரையே சின்னாபின்னமாக்கியது.

இந்த புயலால் ஆந்திரா- ஒடிஷா எல்லை மாவட்டமான கோரபுட். மாவட்டமும் நிலைகுலைந்து போயுள்ளது. கோரபுட் மாவட்டத்தின் 14 தாலுக்காளில் 20 இடங்களில் மிகக் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
குட்டியா பழங்குடிகள் அதிகம் வசிக்கும் கிராமங்களுக்கான பெரும்பாலான சாலைகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன. பொட்டாங்கி, சுங்கி மற்றும் செமிலிகுடா பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 22 கிலோ மீட்டர் சாலையில் பல இடங்களில் அடுத்தடுத்து மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன.
மேலும் 500 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் சாகுபடியையும் ஹூட் ஹூட் புயல் சூறையாடியிருக்கிறது. கடந்த 33 ஆண்டுகளில் இப்படியான ஒரு கோரத்தாண்டவ புயலை இப்போதுதான் காண்கிறோம் என்கின்றனர் செமிலிகுடாவாசிகள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications