ராகுல் - மோடி கட்டிப்புடி... மாமியார் உடைச்சா மண்குடம்!.. மருமகள் உடைச்சா பொன்குடமா?!
மோடியை ராகுல் கட்டிப்பிடித்ததற்கு குற்றம் காணும் பாஜகவினர் அதே தவறை மோடி செய்தால் மட்டும் கண்டுகொள்வதில்லையே.
Recommended Video

டெல்லி: மோடியை ராகுல் கட்டிப்பிடித்ததற்கு குற்றம் கண்ட பாஜகவினர் அதே தவறை மோடி வெளிநாடுகளில் செய்தால் மட்டும் கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்தது.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆந்திரத்தின் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தார். இதன் மீது விவாதம் நடைபெற்றபோது மோடியை கடுமையாக விமர்சனம் செய்த ராகுல் இறுதியில் அவரது இருப்பிடத்துக்கு சென்று கட்டி அணைத்தார். இதற்கு மோடியும் ராகுலை தட்டிக் கொடுத்தார்.
இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அகாலி தளம் எம்பியோ ஒரு படி மேலே போய் ராகுல் எந்த போதை வஸ்துவை சாப்பிட்டு விட்டு நாடாளுமன்றத்துக்கு வந்தார் என்று கேள்வி எழுப்பினார்.

பிரதமர்
சபாநாயகர் சுமித்ரா மகாஜனோ அவர் வெறும் நரேந்திர மோடி அல்ல, நாட்டின் பிரதமர். ராகுல் நடந்து கொண்ட விதம் சரியில்லை. இருக்கைக்கு வந்து உட்கார்ந்த பிறகு கண் அடிப்பது, பேசிக்கொண்டிருப்பது சரியில்லை. அவையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தியை மென்மையாக கண்டித்தார்.

வளைந்து கொடுப்பது
இந்நிலையில் ராகுலின் செயலை சிலர் வரவேற்றும் கண்டித்தும் உள்ளனர். ராகுல் குழந்தைத்தனமாக நடந்து கொண்டார் என்றும் சிலர் விமர்சனம் செய்தனர். மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் கூறுகையில் வளைந்து கொடுப்பது என்பது எங்களுக்கு நேர்மறையான விஷயம்தான்.

விரும்பவில்லை
ஆனால் மோடியும் பதிலுக்கு ராகுலை கட்டி அணைக்க அவரது சீட்டை விட்டு எழவில்லை. சாதாரணமாக இதுபோன்ற தருணங்களில் எழுந்து நின்று ஏற்பதுதான் வழக்கம். ஆனால் மோடியோ ஆணவம் பிடித்தவர். நல்லெண்ண நடவடிக்கையில் எதை செய்தாலும் அதை விரும்ப மாட்டார் என்றார்.

கட்டிப்பிடி வைத்தியம்
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் குழந்தைத்தனமாக மோடியை ராகுல் கட்டியணைத்தார் என்றார். அதுபோல் பெண் அமைச்சர் ஹர்சிம்ராட் கௌர் கூறுகையில் நாடாளுமன்றத்துக்கு வரும் முன்னர் ராகுல் எந்த போதை வஸ்துக்களை உண்டார். முன்னா பாய் படத்தில் வருவதை போன்ற கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறார் என்றார்.

கட்டி அணைத்தல்
இதுபோல் கட்டி பிடித்து பாராட்டியதற்கு ராகுலை பாஜகவினர் வறுத்தெடுக்கின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளுக்கு செல்லும் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் விளாதிமிர் புதின் , சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரை கட்டி அணைத்துள்ளார். இது மட்டும் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாமியார் உடைத்தால்...
வெளிநாட்டு தலைவர்களை மோடி கட்டிப்பிடித்தது ராஜ்ஜிய ரீதியில் செய்தது சரி என்றால், ராகுல் செய்ததும் சரிதான். ராகுல் காந்தி செய்தது தவறு என்றால் மோடி செய்ததும் தவறு என்று மக்கள் பேசிக் கொள்கின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால் மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டியா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications