மின்கசிவால் ஜெய்ப்பூர் அரண்மனையில் பயங்கர தீ விபத்து: பல அரிய பொருட்கள் பலத்த சேதம்
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள நண்பர்களின் அருங்காட்சியக கட்டிடத்தில் இன்று மின்கசிவால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அங்கிருந்த அதிக விலைமதிப்புள்ள பல பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ளது நண்பர்கள் அருங்காட்சியகக் கட்டிடம். இங்கு கலைஞர்களின் கலைப் பொருட்கள் பல பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன.

இந்நிலையில், இன்று அக்கட்டிடத்தில் மின்கசிவு காரணமாக திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக அங்கு தீயை அணைக்க வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மிகப்பெரிய தீ விபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், பொருட்காட்சியகத்தில் இருந்த பொருட்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இத்தீவிபத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை' என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட பொருட்காட்சிக்கு சிறிது தொலைவில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதிக்கும் தீ பரவுவதற்கு முன்னதாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications