அன்னா ஹசாரே பெயரை தேர்தலில் பயன்படுத்தவேமாட்டோம்: அர்விந்த் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் அன்னா ஹசாரே பெயரை பயன்படுத்தவே மாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் ஆட்சி அமைத்தால் அன்னா ஹசாரேயின் வலுவான லோக்பாலை ராம் லீலா மைதானத்தில் சட்டசபையை கூட்டி நிறைவேற்றுவோம் என்று அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.
தமது பெயரை டெல்லி சட்டசபை தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்று அன்னா ஹசாரே கூறியதுடன் தமது பெயரில் நிதி வசூலிக்கப்பட்டதாகவும் லோக்பால் மசோதா நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்நிலையில் லோக்பால் மசோதா நிதி ரூ3 கோடியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக விமர்சிக்கும் அன்னா ஹசாரேயின் வீடியோ காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், ஹசாரேயின் பேச்சு மிகவும் புண்படுத்திவிட்டது. லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்பதற்காகத்தான் அன்னா ஹசாரேயின் பெயரை பயன்படுத்தினோம். இனிமேல் அவரது பெயரை பயன்படுத்தமாட்டோம்.
நாங்கள் ராபர் வதேரா, முகேஷ் அம்பானி, நிதின் கத்காரி ஆகியோரின் முறைகேடுகளை அம்பலப்படுத்தினோம். இப்போது அனைவரும் ஒன்றிணைந்துவிட்டனர். காங்கிரஸ்- பாஜக இணைந்து எங்களுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுகிறது. நாங்கள் நிதி முறைகேடு செய்தது நிரூபிக்கப்பட்டால் டெல்லி தேர்தலிலேயே நாங்கள் போட்டியிடவில்லை என்றார் அவர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications