Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாட்டிக்கிச்சே.. மாட்டிக்கிச்சே.. ரொம்ப டீப் முத்தம்.. நாக்குகள் சிக்கி.. கட் செய்து துண்டித்த கணவர்

மனைவியின் நாக்கை கத்தியால் வெட்டிய கணவன்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிக்கிக்கொண்ட நாக்குகள்.. வெட்டி எடுத்த கணவன்.. அதிர்ச்சி சம்பவம்-வீடியோ

    அகமதாபாத்: மனைவிக்கு முத்தம் தந்தார் கணவர்.. அது என்ன ஆச்சோ தெரியவில்லை.. 2 பேரின் நாக்கும் எசகுபிசகாக சிக்கி கொண்டது. இப்படி ஒரு வினோத சிக்கலில் இருந்து விடுபட, காய் வெட்டும் கத்தியை எடுத்து மனைவியின் நாக்கை வெட்டி கீழே போட்டுவிட்டார் கணவன்!

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் மன்சூரி. இவருக்கு 46 வயதாகிறது. மனைவி பெயர் தஸ்லீம். கடந்த 9 ஆம் தேதி கணவன் மனைவி ரெண்டு பேரும் தனிமையில் இருந்திருக்கிறார்கள்.

    husband cuts his wife tongue while kissing

    அப்போது ஒருத்தருக்கொருத்தர் முத்தம் தந்து கொண்டும் உள்ளனர். ரெண்டு பேருமே ஓவரா போயிட்டாங்க போல இருக்கு.. முத்தம் தீவிரமாகிவிட்டது.. இதனால் 2 பேரின் நாக்கும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து கொண்டு மாட்டிக் கொண்டது.

    எவ்வளவு விடுபட முயற்சித்தும் முடியவே இல்லை. நாக்குகள் பலமாக சிக்கி கொண்டதில், இருவருமே தடுமாறினார்கள்.. இதில் அன்சாரிக்கு டென்ஷன் ஆகிவிட்டது. அதனால் அப்படியே தஸ்லீமாவை கிச்சனுக்கு தள்ளிக் கொண்டு போய், அங்கிருந்த காய் வெட்டும் கத்தியை எடுத்து, மனைவியின் நாக்கை அறுத்துவிட்டார். இதன்பிறகு நாக்கு விடுபட்டு விட்டது, ஆனால் தஸ்லீமாவுக்கு ரத்தம் கொட்டோ கொட்டென கொட்ட ஆரம்பித்துவிட்டது.

    பொல பொலவென மனைவியின் வாயில் இருந்து வரும் ரத்தத்தை பார்த்ததும் மன்சூரி கடகடவென வீட்டுக்கு வெளியே ஓடிவந்து, கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு அப்படியே தப்பி ஓடிவிட்டார். இந்த சமயத்தில் எதிர்பாராமல் வந்த மன்சூரியின் சகோதரர் இட்ரிஸ் மன்சூரி, தஸ்மீனை மீட்டு சர்தார் வல்லபாய் படேல் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து மன்சூரை கைது செய்துள்ளனர்.

    இதில் என்ன ஒரு முக்கியமான மேட்டர் என்றால், தஸ்லீம், மன்சாரிக்கு 3-வது மனைவியாம். முதல் மனைவியை எரித்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2-வது மனைவி இவர் டார்ச்சர் தாங்காமல் ஓடியே விட்டாராம். இப்போது இருப்பது 3-வது மனைவி.. ஆஸ்பத்திரி வரை கொண்டு வந்து விட்டுள்ளார். இன்னும் மன்சூரி என்னவெல்லாம் செய்ய போகிறாரோ தெரியவில்லை!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+