தொட்டதற்கெல்லாம் சந்தேகம்.. மனைவிக்கு 30 இடத்தில் கத்தி குத்து.. துடிதுடித்து இறந்த ஜுபைதா!
மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்
குடகு: ஓவர் சந்தேகம்.. அதனால்தான் மனைவியை மொத்தம் 30 இடத்தில் கத்தியால் குத்தி கொன்றிருக்கிறார் ஒருவர்!
குடகு மாவட்டம் மடிகேரி டவுன் ஹொச படாவனே பகுதியை சேர்ந்தவர் செரீப். 20 வயதிலேயே இவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது.. இப்போது வயசு 27 ஆகிறது.. மனைவி பெயர் ஜுபைதா. 25 வயதாகிறது! 2 மகள்கள் உள்ளனர்.
செரீப் மடிகேரியில் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆனால் கொஞ்ச நாளாகவே செரீப்புக்கு, ஜுபைதாமேல் நிறைய சந்தேகம் வந்தது.. அவரது நடத்தை சம்பந்தமாக சந்தேகப்பட்டு கொண்டே இருந்தார்.

சந்தேகம்
இது சம்பந்தமாக தம்பதிக்குள் அடிக்கடி சண்டை போய் கொண்டே இருந்தது. சம்பவத்தன்று இரவும் செரீப்புக்கு ஜுபைதா மீது ஏதோ சந்தேகம் வந்துவிட்டது. இதனால் திரும்பவும் வாக்குவாதம் ஆரம்பித்து தகராறு அதிகமானது. இந்த சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துவிட்டனர்.

ஆத்திரம்
வழக்கம்போல, கணவன் - மனைவியை சமாதானப்படுத்திவிட்டு அவர்கள் தூங்க போனார்கள். தம்பதியும் ஆளுக்கொரு பக்கம் படுக்க போனார்கள். ஆனால் நடுராத்திரி எழுந்துகொண்டார் செரீப்.. அவரால் ஜுபைதா மீது ஆத்திரம் தீரவே இல்லை.. அதனால் கிச்சனுக்கு போய், கத்தியை எடுத்து வந்து, நன்றாக தூங்கி கொண்டிருந்த மனைவியை சரமாரியாக குத்தினார்.

30 முறை
ஒருமுறை கத்தியால் குத்தியதற்கே ஜுபைதா அலறி அடித்து கொண்டு எழுந்தார். ஆனால், விடாமல் மனைவியை 30 முறை சரமாரியாக குத்தினார் செரீப். 30 முறை குத்தியும் ஆத்திரம் அடங்காமல், ரத்த வெள்ளத்தில் விழுந்த கிடந்த மனைவியின் கழுத்தையும் நெரித்தார். துடிதுடித்து அங்கேயே உயிரிழந்தார் ஜுபைதா.. ஆனால் செரீப் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கைது
ஜுபைதாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடிவந்தனர்.. ஆனால் வீடெல்லாம் ரத்தம் வழிந்து கிடக்க ஜுபைதா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ந்தனர். பின்னர் மடிகேரி டவுன் போலீசுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர், கொலை செய்துவிட்டு அதே பகுதியில் பதுங்கி இருந்த செரீப்பையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications