ரஜினி கூடயா.. அதற்கெல்லாம் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் பாஸ்.. இர்பான் கான்
மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோதுவது குறித்தெல்லாம் நான் நினைத்துக் கூட பார்க்க மாட்டேன். ரஜினி படம் வெளியாகும் அதே நாளில் எனது படமும் வெளியாகிறதே என்பதே எனக்குப் பெருமையானது. அவருடன் மோதுவதற்கெல்லாம் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இர்பான் கான்.
கபாலி உலகெங்கும் வெளியாகும் அதே நாளில்தான் இர்பான் கான் நடித்துள்ள மதாரி படமும் மும்பையில் வெளியாகிறது. இந்த இரண்டு படத்துக்கும் சம்பந்தமே கிடையாது. ஆனாலும் இந்தப் படத்தை கோர்த்து விட்டு விட்டனர். காரணம், மதாரி படத்தின் போஸ்டரைப் போலவே, கபாலி படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியதுதான்.

மதாரி பட போஸ்டரை கபாலி குழு காப்பி அடித்து விட்டதாகவும் பரபரப்பு கிளம்பியது. ஆனால் உடனடியாக இர்பான் கான் விளக்கம் அளித்து பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் கபாலி படம் வெளியாகும் அதே நாளில் மதாரியும் வெளியாவதால் இது ரஜினிக்குப் போட்டியா என்று இர்பான் கானிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார். எனக்கும், அவருக்கும் எப்படி போட்டி இருக்க முடியும். அப்படியெல்லாம் போட்டியிட வேண்டுமானால் இந்த பிறவி முடிந்து அடுத்து ஒரு பிறவி எடுத்து வர வேண்டும்.
இது நிச்சயம் மோதல் இல்லை. அவர் மிகப் பெரியவர். ஒரு பெரிய நடிகராக உலகெங்கும் கோடிக்கணக்கில் ரசிகர்களைச் சேர்த்து வைத்திருப்பவர். அவருக்கு நான் சமமாக முடியாது. எனது படம் அவரது படத்துடன் சேர்ந்து வருகிறது என்பதே பெரிய விஷயம், அதிர்ஷ்டமாகும் என்று கூறியுள்ளார் இர்பான் கான்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications