திமுகவில் எனக்கு அங்கீகாரமே கிடைக்கவில்லை... குஷ்பு பரபரப்பு புகார்!
டெல்லி: இந்தியாவின் ஒற்றுமைக்கான ஒரே கட்சி காங்கிரஸ் தான் என்று அந்த கட்சியில் சேர்ந்துள்ள நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தான் தனக்கான இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து வெளியேறிய நடிகை குஷ்பு இன்று மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார். அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடன் இருந்தார்.

காங்கிரஸில் சேர்ந்த பிறகு குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திமுகவில் எனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. அதனால் ஓராண்டுக்கு முன்பே திமுகவை விட்டு விலக முடிவு செய்தேன். காங்கிரஸ் கட்சி மீது எனக்கு ஈடுபாடு உண்டு. அதனால் தான் காங்கிரஸில் சேர்ந்துள்ளேன்.
இந்தியாவின் ஒற்றுமைக்கான ஒரே கட்சி காங்கிரஸ் தான். இப்போது தான் நான் உரிய இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளேன். நான் நாட்டின் நன்மைக்காக பாடுபடுவேன். தமிழகம் என்று மட்டும் இல்லாமல் மொத்த நாட்டின் நன்மையை கருத்தில் வைத்து செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒற்றுமைக்கான ஒரே கட்சி என்று கூறிய குஷ்புவுக்கு தமிழக காங்கிரஸில் நிலவும் கோஷ்டி பூசல் பற்றி தெரியாதா என்ன.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications