நானும் ஒருநாள் நாட்டின் பிரதமராக வருவேன்... லாலு பிரசாத் யாதவ்
டெல்லி: தாம் நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற கனவு இன்னமும் தகர்ந்துபோய்விடவில்லை ஒருநாள் நாட்டின் பிரதமராக வருவேன் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சிக்கு லாலு பிரசாத் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவே காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். நரேந்திர மோடி, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோர் எந்த வகையிலும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் என் நோக்கம்.
லோக்சபா தேர்தலில் தேர்தலில் லோக் ஜனசக்தி மற்றும் காங்கிரஸுடன் கூட்டணிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் முயற்சி மேற்கொள்ளும். காங்கிரஸுடன் நிச்சயம் கூட்டணி வைப்போம். பொறுத்திருந்து பாருங்கள்.
மதவாத சக்திகள் கையில் இந்தியா சிக்குவதைத் தடுப்பதே நோக்கம். எனக்கு ராம் விலாஸ் பாஸ்வானுடனோ காங்கிரஸுடனோ எந்த பிரச்னையும் இல்லை.
நான் சிறைக்கு செல்ல காரணமே ராகுல் காந்தி என்று கூறப்படுவதில் உண்மை ஏதும் இல்லை. அப்படியான ஒரு பொய் திட்டமிட்டு பரப்பப்படுகிறது
நாங்கள் மூன்றாவது அணியில் இடம்பெறவில்லை. 3வது அணியில் உள்ள கட்சிகளின் ஒவ்வொரு தலைவரும் தானே பிரதமர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளனர்.
எனக்கும் பிரதமராக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அந்தக் கனவு இன்னமும் தகர்ந்துபோய்விடவில்லை. நானும் ஒருநாள் நாட்டின் பிரதமராக வருவேன்.
இவ்வாறு லாலுபிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications