மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்...நான் முற்றிலும் நலமாக உள்ளேன்...சவுரவ் கங்குலி பேட்டி!
கொல்கத்தா: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரிய(பி.சி.சி,ஐ) தலைவரும், இந்திய முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
Recommended Video

கடந்த 2-ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கங்குலி. அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தான் முற்றிலும் நலமாக உள்ளதாகவும், தனக்கு நல்லபடியாக சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதி
இந்திய கிரிக்கெட் வாரிய(பி.சி.சி,ஐ) தலைவரும், இந்திய முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 48 வயதான சவுரவ் கங்குலிக்கு இதயத்தில் இரண்டு அடைப்புகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவனை டாக்டர்கள் தெரிவித்தனர். ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் மூலம் ஒரு அடைப்பு சரிசெய்யப்பட்டது.

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
2-வது அடைப்பும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2-வது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், நாளைமறுதினம் (புதன்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
இந்த நிலையில் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சவுரவ் கங்குலி தொடர்ந்து மருந்துகளை எடுத்துகே கொள்வார். மேலும் அவரது உடல்நிலை அவரது வீட்டில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் தொடர்ந்து கண்காணிப்படும். என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நலமாக உள்ளேன்
மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது சவுரவ் கங்குலி நிருபர்களிடம் கூறியதாவது:-
நாம் நமது உயிரைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு வருகிறோம். அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனக்கு நல்லபடி சிகிச்சை அளித்து, என்னை நன்றாக கவனித்து கொண்ட உட்லேண்ட்ஸ் மருத்துவமனை மற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன். விரைவில் பறக்கத் தயாராக இருப்பேன் என்று நம்புகிறேன் என்று கங்குலி கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications