அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: காங்., திமுக.. "இந்தியா" கூட்டணி தலைவர்கள் நிலைப்பாடு இதுதான்!
டெல்லி: அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக ஒட்டுமொத்தமாக "இந்தியா" கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
அயோத்தியில் ஜனவரி 22-ந் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. மத்திய அரசு ஜனவரி 22-ந் தேதி அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் அரை நாள் விடுமுறை, முழு நாள் விடுமுறை அறிவித்துள்ளன.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை "இந்தியா" கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன.
காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதன் தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் முழுமையாக திறக்கப்படாத ராமர் கோவில் திறப்பு விழா ஒரு அரசியல் நிகழ்வு என விமர்சித்துள்ளனர். பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை மோடியை முன்னிறுத்தி நடத்தும் அரசியல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எப்படி பங்கேற்கும் என்கிறார் ராகுல் காந்தி.
மமதா பானர்ஜி: திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, அன்றைய தினம் கொல்கத்தாவில் நல்லிணக்க பேரணி நடத்தப்படும்; காளி கோவிலில் வழிபாடு நடத்தப்படும் என கூறியதுடன் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா பம்மாத்து எனவும் விமர்சித்துள்ளார்.
கெஜ்ரிவால்: ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், ஜனவரி 22-ந் தேதியன்று அயோத்திக்கு செல்ல மாட்டோம். ஆனால் அதன் பின்னர் விரைவில் அயோத்தி சென்று வழிபாடு நடத்துவோம் என்றார்.
திமுக: திமுகவைப் பொறுத்தவரையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு ஒரு அரசியல் நிகழ்வு. அரசியலில் மதத்தை இணக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜனவரி 22-ந் தேதிக்குப் பின்னர் அயோத்திக்கு செல்வேன் என்று மட்டும் கூறியுள்ளார்.
லாலு பிரசாத்: ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அயோத்திக்கு போகமாட்டோம் என அறிவித்துள்ளார். அயோத்தி கோவிலுக்கான அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தி சரித்திரம் படைத்தவர் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்.
ஜேடியூ, இடதுசாரிகள்: ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், ஜனவரி 22-ந் தேதியன்று அயோத்தி செல்லப் போவதில்லை; அன்று வேறு நிக்ழ்ச்சிகளில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார். இடதுசாரிகளும் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பதில்லை என அறிவித்திருக்கின்றனர்.
சிவசேனா: சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, ராமர் கோவில் இயக்கத்தின் உண்மயான பங்கேற்பாளர்கள் நாங்கள்தான். அன்றைய தினம் ராமர் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்போம் என்கிறார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் ஜனவரி 22-க்கு பின்னர் அயோத்தி செல்வேன் என்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications