மும்பை இந்தியன்ஸ் அணியில் அம்பாதி ராயுடு! அரசியலுக்கு குட்பை கூற காரணம் இதுதான்! அவரே தந்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அம்பாதி ராயுடு 10 நாட்களுக்குள் அதில் இருந்து விலகினார். இதன் பின்னணி காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அம்பாதி ராயுடுவே விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் அம்பாதி ராயுடு. இந்திய அணிக்காக ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடினார். இவருக்கு இந்திய அணியில் போதுமான அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

I will be representing the Mumbai Indians in ILt20, says Ambati Rayudu and explains why he quits politics

இருப்பினும் அவர் ஐபிஎல்லில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஐபிஎல்லில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் விளையாடி உள்ளார்.

2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியிலும், அதன்பிறகு 2018 முதல் கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் வரை சிஎஸ்கே அணியிலும் விளையாடினார். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் அவர் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார். இதையடுத்து ஓய்வில் இருந்த அவர் கடந்த மாதம் 28 ம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் தான் திடீரென்று அவர் நேற்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சியில் இணைந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் அம்பாதி ராயுடு விலகுவதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இருப்பினும் கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. இதனால் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தலில் சொந்த தொகுதியான குண்டூரில் அம்பாதி ராயுடு போட்டியிட வாய்ப்பு கேட்ட நிலையில் அதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்ததால் ராயுடு விலகியதாக தகவல்கள் பரவின.

இந்நிலையில் தான் அம்பாதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: துபாயில் ஜனவரி 20ம் தேதி முதல் நடக்கும் ஐஎல்டி20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பங்கேற்க உள்ளேன். கிரிக்கெட்டில் விளையாடும்போதும் அரசியலுடன் சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

அதாவது இந்தியாவில் ஐபிஎல் போட்டி போன்று ஐக்கிய அரபு எமிரேட்டில் ஐஎல்டி20 நடத்தப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளனர். அபுதாபி தாபி நைட் ரைடர்ஸ், துபாய் கேப்பிட்டல்ஸ், டெசட் வைபர்ஸ், கல்ஃப் ஜியான்ட்ஸ், எம்ஐ எமிரேட்ஸ்(மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்), சார்ஜா வாரியர்ஸ் உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ளனர். இதில் ராயுடு எம்ஐ எமிரேட்ஸ் அணியில் விளையாட உள்ளதால் தான் அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+