கள்ளக்காதல் வைத்திருந்த டீச்சரை கொன்ற கணவன்.. கொலையாளி குழந்தையை வளர்க்க காதலி ரெடி!
பெங்களூர்: தன்னை திருமணம் செய்வதற்காக மனைவியையே கொலை செய்துள்ளாரே என்று பரிதாபப்பட்டுள்ள கரோலின், கோகுலின் மகளை பராமரிக்கும் பொறுப்பை தானே ஏற்றுக்கொள்ள உள்ளதாக போலீசாரிடமும், கவுன்சலிங் கொடுத்தவர்களிடமும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்பட்ட விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக வாட்ஸ்சப் மூலமும், தொலைபேசி மூலமும் மிரட்டல் விடுத்த வழக்கில், பெங்களூரில் வசித்து வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கோகுல் (33) என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோகுலின் காதல்
போலீசாரிடம் கோகுல் அளித்த வாக்குமூலத்தின்போது, தனது மனைவியை கொலை செய்துவிட்டு விபத்து என்று நாடகமாடிய தகவலும் அம்பலமாகிவிட்டது. திருச்சூரில் பள்ளி, கல்லூரி படித்த காலகட்டத்தில் கோகுலுக்கும், கரோலின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் கரோலின் மேற்படிப்புக்காக திருச்சிக்கும், கோகுல் டெல்லிக்கும் சென்றதால் இருவருக்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மனைவியின் கள்ளக்காதல்
இந்நிலையில், டெல்லியில் பழக்கமான அனுராதா என்ற பெண்ணை திருமணம் செய்து பணிக்காக பெங்களூர் வந்தார் கோகுல். இத்தம்பதிக்கு 1 மகள் உள்ள நிலையில், அனுராதா வேலைபார்த்த கல்வி நிறுவனத்தில் படித்த மாணவனோடு கள்ளக்காதலுக்கு ஆட்பட்டார். இதை ஆதாரப்பூர்வமாக தெரிந்துகொண்டார் கோகுல்.

காதலியுடன் பழக்கம்
இந்நிலையில்தான், கோகுலுக்கு, கரோலின் தொடர்பு பேஸ்புக் மூலம் மீண்டும் கிடைத்துள்ளது. கரோலினுக்கு சாஜு ஜோஸ் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன என்பதையும் அறிந்துகொண்டார். இதையடுத்து அனுராதாவை கொலை செய்துவிட்டு, சாஜு ஜோசை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சிறைக்கு அனுப்பிவிட்டு கரோலினை அடைய திட்டமிட்டார் கோகுல்.

வெடிகுண்டு மிரட்டல்
இதன்படி ஜூலை 27ம் தேதி அனுராதாவை தலையில் அடித்துக்கொன்ற, கோகுல், கடந்த சனிக்கிழமை, டெல்லி மற்றும் பெங்களூர் விமான நிலைய அதிகாரிகளுக்கு, சாஜு ஜோஸ் பெயரில் வாங்கிய சிம்கார்டு போட்ட செல்போனில் இருந்து மிரட்டல் அழைப்புவிடுத்தார். இருப்பினும் போலீஸ் விசாரணையில் கோகுல் சிக்கினார். எனவே, அனுராதாவை கொலை செய்ததில் காதலி கரோலினுக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

காதலிக்கும் தொடர்பா?
இதையடுத்து ஒரு மனோதத்துவ கவுன்சலர் உள்பட 3 பெண் அதிகாரிகள், கரோலினிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், அனுராதா கொலையில் கரோலினுக்கு தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது. மாறாக, இந்த சம்பவங்களை பற்றியெல்லாம் கேட்டறிந்த கரோலினுக்கு, கோகுல் மீது பரிதாபம் வந்துள்ளது அவரது பேச்சில் தெரிகிறதாம். 'எனக்காகவா வாழ்க்கையில் இத்தனை ரிஸ்குகளை கோகுல் எடுத்தார்.. அப்படிப்பட்டவரின் குழந்தையை நானே பராமரித்துக்கொள்ள தயாராக உள்ளேன்' என்று விசாரணை அதிகாரிகளிடம் கூலாக சொல்லியுள்ளார் கரோலின்.

உறவுகள் நிலை என்ன?
கோகுல் மற்றும் அனுராதா ஆகிய இரு குடும்பத்தாருக்கும் காவல்துறை தகவல் கூறியுள்ளது. அவர்களில் எந்த தாத்தா குடும்பம், குழந்தையை வளர்க்க முன்வருகிறது என்று போலீசார் உறுதி செய்வார்கள். யாருமே முன்வராவிட்டால், கோகுல் சிறை தண்டனையை முடித்து வெளியேவரும்வரை கரோலின் அக்குழந்தையை வளர்க்க தயாராக உள்ளாராம். கோகுலுக்கு எப்படியும் ஆயுள் தண்டனை கேரண்டி என்கிறது சட்ட வட்டாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தையுடன் பழக்கம்
பெங்களூர் எச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில், கோகுல் மற்றும் கரோலின் குடும்பம் சமீபகாலமாக அண்டையில் வசித்து வந்ததால், அனுராதா இறந்த பிறகு பெரும்பாலான நேரம், கோகுலின் குழந்தை கரோலின் வீட்டில்தான் நேரத்தை செலவிட்டுள்ளது. எனவே கரோலினுக்கு அக்குழந்தையை வளப்பதில் சிரமம் இல்லை என்று தெரிவித்துள்ளாராம்.

காதலியின் கணவருக்கும் ஓகே
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இத்தனை நடந்த பிறகும், கோகுல் குழந்தையை தனது வீட்டில் வைத்து வளர்ப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சாஜு ஜோஸ் கூறியுள்ளாராம். சாஜு ஜோஸ் மிகவும் ஜென்டில்மேன்தனமாக பேசுகிறார் என்று விசாரணை அதிகாரிகளே சர்டிபிகேட் கொடுத்துள்ளனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications