ஏமனில் இருந்து மீட்கப்பட்ட 349 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்: குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர்
மும்பை: உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் இருந்து மீட்கப்பட்ட 349 இந்தியர்கள் நாடு திரும்பினர்.

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் 4 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களை மீட்டு பத்திரமாக இந்தியா அழைத்து வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த 31ம் தேதி இரவு ஏமனில் உள்ள ஏடன் துறைமுகத்தில் இருந்து 349 இந்தியர்கள் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் மூலம் மீட்கப்பட்டு அண்டை நாடான ஜிபோட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஏப்ரல் 1ம் தேதி மதியம் ஜிபோட்டியை அவர்கள் அடைந்தனர். அவர்கள் விமானப்படையைச் சேர்ந்த 2 விமானங்கள் மூலம் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனர். 190 பேர் மும்பைக்கும், 169 பேர் கொச்சிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

169 பேருடன் கிளம்பிய விமானப்படை விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவர்களை கேரள மாநில வெளிநாடு வாழ் கேரள மக்கள் விவகாரத்துறை அமைச்சர் கே.சி. ஜோசப் மற்றும் மாநில துறைமுகம் மற்றும் கலால் வரித் துறை அமைச்சர் கே. பாபு ஆகியோர் வரவேற்றனர்.
190 பேருடன் கிளம்பிய விமானப்படை விமானம் இன்று காலை 4 மணிக்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. மகாராஷ்டிரா மாநில சுற்றுலா மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தா மற்றும் எம்.பி. கிரித் சோமையா ஆகியோர் அந்த 190 பேரை வரவேற்றனர்.

ஆபரேஷன் ராஹத் எனப் பெயரிடப்பட்டுள்ள மீட்பு பணியின் முதல்கட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. மீட்கப்பட்ட 349 பேரில் 206 பேர் கேரளாவையும், 40 பேர் தமிழகத்தையும், 31 பேர் மகாராஷ்டிராவையும், 23 பேர் மேற்கு வங்கத்தையும், 22 பேர் டெல்லியையும் சேர்ந்தவர்கள். பிற மாநிலங்களை சேர்ந்த சிலரும் மீட்கப்பட்டவர்களில் அடக்கம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications