பெங்களூரில் ஐபிஎம் ஊழியர் குத்திக் கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்
பெங்களூர்: பெங்களூரில் ஐபிஎம் கால் சென்டர் மேனேஜரான அபிஷேக் திம்மராயப்பா அவர் வீட்டு வாசலில் வைத்து 4 பேரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரின் மைசூர் ரோடு அருகே உள்ள பந்தரபாளையாவில் வசித்து வந்தவர் அபிஷேக் திம்மராயப்பா(30). ஐபிஎம் நிறுவன கால் சென்டரில் மேனேஜராக பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை பணி முடிந்து காலை 4 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவரது வீட்டு வாசலில் வைத்து அவரை 4 பேர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயம் அடைந்த அபிஷேக் கெங்கேரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அபிஷேக் நயந்தனஹள்ளி அருகே உள்ள நியூ நேஷனல் பள்ளியின் உரிமையாளர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்த அவரது தந்தை நயந்தனஹள்ளி கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர்.
அபிஷேக் ரஷ்மி என்பவரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அந்த ரஷ்மிக்கு இது இரண்டாவது திருமணம் என்றும், அபிஷேக்கிற்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிவிட்டது, அவருக்கு 2 வயதில் மகள் உள்ளார் என்றும் இரு வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாகவே அபிஷேக்கிற்கு யாரோ போன் மூலம் மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications