For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருண் உ.பி. முதல்வரானால் சிறப்பாக இருக்கும்... இப்படிச் சொல்வது மேனகாகாந்தி

Google Oneindia Tamil News

லக்னோ: தனது மகன் வருண் காந்தி உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றால் அம்மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் மேலும் சிறப்பாக நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் மேனகாகாந்தி.

சமீபகாலமாக உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் காணப்படுகிறது. இதற்கு அம்மாநிலத்தின் ஆளும் கட்சியே முக்கியக் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், சுல்தான்பூரில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனது மகணான வருண்காந்தியை, இந்தியாவின் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக்கும் தனது ஆசையை சூசகமாகத் தெரிவித்துள்ளார் மேனகாகாந்தி.

இது தொடர்பாக லக்னோவில் நடைபெற்ற கூட்டத்தில் மேனகா காந்தி கூறியதாவது :-

மத்தியில் பாஜக....

உத்தரபிரதேசத்தில் தற்போது முலாயம் சிங் ஆட்சி நடைபெற்று வருகிறது.மத்தியில் பாரதீய ஜனதா கட்சி நடைபெற்றுவருகிறது.

வளர்ச்சிப் பணிகள் முடக்கம்....

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் உத்தரபிரதேசத்தில் உள்ள முலாயம் சிங் யாதவ் அரசு அங்கு வளர்ச்சி பணிகளை செய்ய அம்மாநில அரசு தவறிவிட்டது.

வருண்காந்தி...

அதனால் உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரவேண்டும். அதுவும் வருண்காந்தி உத்தரபிரதேச முதல்வரானால் வளர்ச்சி பணிகள் சிறப்பாக இருக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்வர் கனவு....

இப்பேச்சின் மூலம் தனது மகனை முதல்வராக்கும் திட்டத்தில் மேனகாகாந்தி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

English summary
Union Minister Maneka Gandhi apparently thinks that her son Varun could reform Uttar Pradesh if he becomes chief minister of India's largest state..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X