‛ராமர் கோவிலுக்கு நான் போவேன்’.. என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள்.. அரசியல்வாதிகளை விளாசிய ஹர்பஜன்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் நிராகரித்துள்ளன. நான் கண்டிப்பாக போவேன். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஆம்ஆத்மி எம்பியுமான ஹர்பஜன் சிங் கண்சிவக்க கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் கோலாகலமாக உள்ளது. இதற்கான பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்றைய தினம் கோவில் கருவறையில் 5 வயது குழந்தை பருவ ராமர் சிலை நிறுவப்பட்டது.

வரும் 22ம் தேதி நடக்கும் கும்பாபிஷேகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று இந்த சிலைக்கு சாஸ்திரத்தின் அடிப்படையிலான சடங்குகளை செய்ய உள்ளார். இந்த கும்பாபிஷேக விழாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்க உள்ளனர். பல்வேறு துறைகளில் சாதித்த பிரபலங்கள், அரசியல்வாதிகள், மடாதிபதிகள், சாமியார்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்கிடையே தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழை சில கட்சிகள் நிராகரித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டவர்கள் அழைப்பை நிராகரித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் விழாவில் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இவர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிபோது இவர் தமிழ் மொழியில் தனது வலைதள பக்கத்தில் பதிவுகளை செய்து கவர்ந்தார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் அரசியல்வாதியாக மாறியுள்ளார். தற்போது ஆம்ஆத்மி கட்சி சார்பில் பஞ்சாப்பில் இருந்து ராஜ்யசபா எம்பியாக இவர் உள்ளார். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக அவர் கூறிய கருத்து என்பது கவனம் பெற்றுள்ளது. தற்போது துபாயில் உள்ள அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை சில அரசியல் கட்சிகள் நிராகரித்துள்ளது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஹர்பஜன் சிங், ‛‛அயோத்தி தொடர்பாக அரசியல்வாதிகள் பேசுவது என்பது வேறுவிதமான விஷயம். ஆனால் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது என்பதே சரியான விஷயம். தற்போது இந்த கோவில் கட்டப்படுவது என்பது நம் வாழ்நாளில் கிடைத்த அதிர்ஷ்டம். இதனால் நாம் அனைவரும் அங்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். யார் அங்கு சென்றாலும், செல்லாமல் இருந்தாலும் கூட எனக்கு கடவுள் ராமர் மீது நம்பிக்கை உண்டு என்பதை கூறி கொள்ள விரும்புகிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவர் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவன் நான். இதனால் நான் ராமர் கோவிலுக்கு கண்டிப்பாக செல்வேன்.
எந்தக் கட்சி அங்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் எனது நிலைப்பாடு என்பது ஒன்று தான். நான் கோவிலுக்கு செல்வேன். காங்கிரஸ் செல்ல விரும்பினால் செல்லலாம். செல்ல விரும்பாவிட்டாலும் அந்த முடிவை சுதந்திரமாக எடுக்கலாம். இந்த கருத்து என்பது அனைவருக்கும் பொருந்தும். அதேவேளையில் நான் அயோத்தி ராமர் கோவில் செல்வதில் யாருக்காது பிரச்சனை என்றால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் கடவுள் மீது தீவிர நம்பிக்கை கொண்டவன். என் வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அது எல்லாம் கடவுளின் கிருபையே. எனவே நான் அயோத்தி சென்று ராமரின் ஆசீர்வாதத்தை பெறுவேன்.
மேலும் மக்கள் அனைவரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரில் அல்லது தொலைக்காட்சியில் பார்த்து ஆசீர்வாதம் பெற வேண்டும். உண்மையில் கும்பாபிஷேக நாள் என்பது வரலாற்று சிறப்புமிக்க நாள். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். ராமர் பிறந்த இடத்தில் அவருக்குக் கோயில் கட்டப்படுவது பெரிய விஷயம். அனைவரும் அங்கு செல்ல வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications