Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மே.வங்கம் எரிந்தால் டெல்லியும் எரியும்".. பாஜகவை மிரட்டிய மம்தா பானர்ஜி! அமித்ஷாவுக்கு போன கடிதம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் மேற்கு வங்கத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இன்று பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் கடும் கோபமடைந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‛‛மேற்கு வங்கம் பற்றி எரிந்தால் அசாம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் டெல்லியும் பற்றி எரியும்'' என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 9 ம் தேதி நடந்தது.

mamata banerjee west bengal kolkata

இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இதில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி டாக்டர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இது முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஒருபுறம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் மறுபுறம் பல்வேறு அமைப்பினர் பெண் டாக்டர் பலாத்கார கொலையை கண்டித்தும், மம்தா பானர்ஜி ராஜினாமா செய்யக்கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மருத்துவ மாணவர்கள் மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றபோது தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.

இந்நிலையில் தான் பயிற்சி பெண் டாக்டர் பலாத்கார கொலை மற்றும் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து இன்று 12 மணி நேர பந்துக்கு பாஜக அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று பல இடங்களில் போக்குவரத்து முடங்கியது. வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. அதேவேளையில், மருந்தகங்கள், பால், காய்கறி விற்பனைகள் வழக்கம்போல் நடந்தது. இந்த வேளையில் மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விலக வேண்டும் என்று பாஜகவினர் கோஷமிட்டு ஊர்வலம் சென்றனர். இதனால் சில இடங்களில் பாஜகவினர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் தான் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவின் ஸ்தாபக நாளை குறிக்கும் வகையிலான நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். அப்போது அவர், ‛‛சிலர் மேற்கு வங்கத்தை வங்கதேசம் என்று நினைக்கின்றனர். தயவு செய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நான் வங்கதேசத்தை நேசிக்கிறேன். அவர்களும் எங்களை போலவே பேசுகிறார். அவர்களின் கலாசாரம் நம்முடையதை போலவே உள்ளது. ஆனால் வங்கதேசம் என்பது ஒரு தனி நாடு. இந்தியா என்பது ஒரு தனி நாடு.

மேலும் சிலர் மேற்கு வங்கத்தில் அமைதியை சீர்க்குலைக்க முயன்று வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறனே். மேற்கு வங்கம் பற்றி எரிந்தால் அசாம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் டெல்லியும் பற்றி எரியும்'' என கடும் எச்சரிக்கை விடுத்தார். இததொடர்பான பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

mamata banerjee west bengal kolkata

இதுபற்றி மத்திய அமைச்சரும், மேற்கு வங்க மாநில பாஜக தலைவருமான சுகந்தா மஜூம்தார தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெட்கம் எதுவுமின்றி தேசவிரோத கருத்துகளை கூறுகிறார். மேற்கு வங்கம் எரிந்தால் அசாம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் டெல்லியும் எரியும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என்று அரசியலமைப்பு பதவியில் இருந்து கொண்டு அதற்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்'' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, ‛‛மேற்கு வங்கத்தில் தீவிரமான நிலை உள்ளது. இங்குள்ள பிரச்சனையை தீர்க்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், பொது அமைதியை காக்கவும் தேவையான பொருத்தமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

அதேபோல் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் மம்தா பானர்ஜியை திட்டியுள்ளார். இதுதொரடர்பாக அவர், "மம்தா பானர்ஜியே அசாமை அச்சுறுத்த உங்களுக்கு எவ்வளவு தைரியம் உள்ளதா? சிவந்த கண்களை எங்களுக்குக் காட்ட வேண்டாம். உங்களின் தோல்வி அரசியலால் இந்தியாவை எரிக்கக் கூட முயற்சிக்காதீர்கள். பிரித்தாளும் மொழி பேசுவது உனக்குப் பொருந்தாது"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+