22 கோடீஸ்வரர்களை மோடி உருவாக்கினார்! நாங்களோ கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதியாக்க போகிறோம்: ராகுல்
ராஞ்சி: பிரதமர் மோடி வெறும் 22 கோடீஸ்வரர்களை மட்டுமே உருவாக்கினார். ஆனால் நாங்களோ கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதியாக்க போகிறோம் என்று ஜார்க்கண்டில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
நாட்டின் 18 வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், 3-ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. இன்னும் 4 கட்ட தேர்தல் பாக்கியிருப்பதால் அனல் பறக்கும் பிரசாரம் நீடித்து வருகிறது. அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. பாஜகவும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. காங்கிரஸ், பாஜக இடையே கடும் கருத்து மோதலும் ஈடுபட்டு வருகிறது.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பரம்பரை வரி விதித்து சாமானிய மக்கள் வாழ்நாள் எல்லாம் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை பறித்து விடும் என்று காட்டமாக பேசினார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இல்லாத வாக்குறுதியை இருப்பதாக கூறி மோடி பேசுவதாக காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்தது.
அதேபோல், கடந்த வாரம் ஒடிசாவில் பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடி ஏழைகளிடம் இருந்த பணத்தை பறித்து, 22 கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளார். பாஜக ஆட்சியில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மட்டுமே உயர்ந்தது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி பேரை லட்சாதிபதி ஆக்குவோம்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். ராகுல் காந்தி பேசியதாவது:- பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நீர், வனம், நிலங்களை கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு தாரைவார்த்து கொடுக்க மோடி விரும்புகிறார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதியாக்கும். அரசியல் அமைப்பை, ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகள், பழங்குடியின மக்களையும் காப்பாற்றுவதுதான் இந்த தேர்தலில் நோக்கமாக உள்ளது. நாட்டில் உள்ள 14 - 15 தொழிலதிபர்களுக்கு வளங்களை கொடுக்க மோடி நினைக்கிறார்.
10 ஆண்டுகளில் 22 பேரை கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும்" என்றார்.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. டென்ஷனான ராகுல் காந்தி.. கூட்டத்தில் எம்பிக்கள் வாக்குவாதம்! -
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
எழும்பூர்.. திமுகவின் இரும்புக்கோட்டை.. தவெக ராஜ்மோகனுக்கு ‘டெபாசிட்’ கிடைப்பதே சவால்.. ஏன்? -
திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
காங்கிரஸுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல.. கேரளாவில் வினோத பிரச்சனை.. தோல்வி உறுதி? -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட்












Click it and Unblock the Notifications