ராமர் கோவிலுக்காக தூக்கில் தொங்கவும் தயார் - மத்திய அமைச்சர் உமாபாரதி ஆவேசம்!
ராமர் கோவிலுக்காக தூக்கில் தொங்கவும் தயாராக இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
லக்னோ: ராமர் கோவிலுக்காக ஜெயிலுக்குப்போகவும் தூக்கில் தொங்கவும் தயாராக இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார். தன்னை பொறுத்தவரை அது ஒரு நம்பிக்கை சார்ந்த பிரச்சனை என்றும் உமாபாரதி கூறினார்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி நேற்று உத்தரப்பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ராமர் கோவில் என்பது என்னைப் பொறுத்தவரை நம்பிக்கைக்குரிய விஷயம். அதற்காக நான் மகத்தான பெருமை கொள்கிறேன் என்றார்.

மேலும் ராமர் கோவில் கட்டுவது குறித்து முதல்வர் ஆதித்யநாத் உடன் பேசினீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் உமாபாரதி, நாங்கள் ராமர் கோவில் கட்டுவது குறித்த பேசத் தேவையில்லை என்றார்.
மாற்று மக்கள் கிடையாது
இந்தப் பிரச்சனையில் நாங்கள் ஒன்றும் மாற்று மக்கள் கிடையாது. முதல்வர் ஆதித்யநாத்தின் குரு மகந்த் அவைத்நாத் கோவில் தொடர்பான பணிகளுக்கு தலைவர் என்றும் கூறினார்.
தூக்கில் தொங்க ரெடி
ராமர் கோவிலுக்காக நான் ஜெயிலுக்கு போக வேண்டுமானாலும் போவேன். தூக்கில் தொங்க வேண்டுமானாலும் தொங்க தயாராக இருக்கிறேன் என்றும் உமாபாராதி கூறினார்,
பேச்சு வார்த்தை மூலம் தீர்வு?
இந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதா அல்லது பிற வழிகளில் தீர்வு காண்பதா என்பதை கோர்ட்டுதான் தீர்மானிக்க வேண்டும் என்றும் உமாபாரதி கூறினார். அதேநேரத்தில் உச்சநீதிமன்றம் இப்பிரச்சனையை வெளியில் பேசி தீர்க்க அறிவுறுத்தியிருப்பதையும் செய்தியாளர்களிடம் பேசும் போது உமாபாரதி சுட்டிக்காட்டினார்.
அதிகம் பேச மறுப்பு
ராமர் கோவில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் இதனை அதிகம் பேச உமாபாரதி மறுப்பு தெரிவித்தார். பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டத்தில் அத்வானி, உமாபாரதி உள்ளிட்ட 13 பேருக்கு தொடர்பு உள்ளதாக சுப்ரீம்கோர்ட்டில் சிபிஐ மனுத்தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications