மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து சோதனையை தொடர்ந்து அடுத்த சர்ச்சை.. மாதவிலக்கு பெண்கள் சமைத்தால்!
அஹமதாபாத்: குஜராத்தில் புஜ் நகரத்தில் உள்ள கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரியில் பெண்களின் உள்ளாடைகளை களைந்து சோதனை நடத்தப்பட்ட நிலையில், அங்கு ஆன்மீக தலைவராக உள்ள கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜீ என்பவர் மீண்டும் மாதவிலக்கு குறித்து பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
'மாத விலக்கான பெண்கள் சமைக்கக்கூடாது, மீறி கணவனுக்கு சமைத்து கொடுத்தால் அடுத்த பிறவியில் நாயாகத்தான் பிறப்பார்கள்,' என்று அவர் சர்ச்சைக்குரிய வகையிலும் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம், கட்ச்சில் உள்ள புஜ் நகரத்தில் சுவாமி நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயில் உள்ள ஆன்மீக தலைவர் கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜீ தற்போது அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

விதிமுறை சர்ச்சை
சுவாமி நாராயணசாமி கோயிலின் அறக்கட்டளைக்கு சொந்தமாக கல்லூரி உள்ளது. இங்கு உள்ள விடுதியில் தங்கி படிக்கும் மாதவிலக்கான மாணவிகள், இதர மாணவிகளுடன் சேர்ந்து உணவருந்தக் கூடாது என்ற விதிமுறை இங்கு கடைப்பிடிக்கப்படிக்கிறார்கள். இந்த விதிமுறையை கடைபிடிக்காதவர்களிடம் நிர்வாகம் கண்டிப்பு காட்டிவருகிறது.

மாதவிடாய் சோதனை
சமீபத்தில், இந்த விதிமுறையை மீறி சில மாணவிகள் நடந்து கொண்டதாக கூறி, அங்கு தங்கியுள்ள 60 மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து பெண் ஊழியர் சோதனை நடத்தினார்கள். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரின் பேரில், விடுதி ஒருங்கிணைப்பாளர், கண்காணிப்பாளர், மற்றும் உதவியாளரை போலீசார் அண்மையில் கைது செய்தனர்.

நாயாக பிறப்பார்கள்
இந்த நிலையில் அடுத்த சர்ச்சையாக ஆன்மீக தலைவர் கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜீ, தனது பிரசங்கத்தில் மீண்டும் மாதவிடாய் குறித்து சர்ச்சையை கிளப்பி உள்ளார். அவர் தனது பிரசங்கத்தில், ‘மாத விலக்கான பெண்கள் சமைக்கக் கூடாது. மாதவிலக்கான பெண்கள் தங்கள் கணவருக்காக சமைத்து கொடுத்தால், அவர்கள் அடுத்த பிறவியில் நாயாக பிறவி எடுப்பார்கள். அதேபோல், மாத விலக்கான பெண்கள் சமைக்கும் உணவை சாப்பிடும் ஆண்கள் எருமையாகத்தான் பிறப்பார்கள் என் கூறியுள்ளார்..

சாஸ்திரத்தில் உள்ளது
தான் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் கவலையில்லை என்று கூறிய கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜீ, நான் சொல்வது எல்லாமே நமது சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அத்துடன் அவர் ஆண்களை சமைக்க கற்றுக் கொள்ளுங்கள் எனறு கூறியுள்ளார்.. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனினும் சாமியாரின் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது. எப்போது வைரலானது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications