காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி: ஆதரவை விலக்கினால் அவர்கள் தான் வில்லன்கள்- கெஜ்ரிவால்
டெல்லி: காங்கிரஸ் கட்சி ஒரு ஊழல் கட்சிதான். அதனுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. அவர்களது ஆதரவோடு ஆட்சி அமைக்கிறோம் என தெரிவித்துள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவோடு அங்கு ஆட்சி அமைக்க இருக்கிறது.

ஆனால் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த விவகாரத்தில் காங்கிரசில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. காங்கிரஸ் மேலிடத்தின் முடிவை கண்டித்து அக்கட்சி தொண்டர்கள் டெல்லியில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப் படும் என அறிவித்தது ஆம் ஆத்மி. இதனைத் தொடர்ந்து தங்களது ஆதரவு நிபந்தனைகளோடு கூடியது, ஆதரவு எந்த நேரத்திலும் வாபஸ் பெறப்படலாம் எனத் தெரிவித்தது காங்கிரஸ்.
இந்நிலையில், காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சிதான் என செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் விமர்சித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘காங்கிரஸ் கட்சி ஒரு ஊழல் கட்சிதான். அதனுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. அவர்களது ஆதரவோடு ஆட்சி அமைக்கிறோம்
இதனால் டெல்லியில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது. ஒரு வேளை காங்கிரஸ் எங்களுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டால் அவர்கள் தான் வில்லன்கள் ஆவர். மேலும், நாங்கள் மக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்தே ஆட்சி அமைக்கிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications