இரவு நேரம்.. ஐஐடி கவுகாத்தியில் மாணவி பலாத்காரம்.. பலாத்காரம் செய்த மாணவருக்கு ஜாமீன்..!
கவுகாத்தி ஐஐடி மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது
கவுகாத்தி: ஐஐடி மாணவியை அதே கல்லூரியை சேர்ந்தோர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கவுகாத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதில் தொடர்புடைய பிடெக் மாணவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 28ம் தேதியன்று இரவு ஐஐடி கவுகாத்தியில் ஒரு மாணவியை அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் பாலியல் பலாத்காரம் செய்தார்..
இரவு நேரத்தில் அந்த பகுதியில் யாருமில்லாததால், விவகாரம் மறுநாள் காலைதான் வெளியே தெரிந்தது.. சம்பவ இடத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த மாணவி மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..
.

பலாத்காரம்
போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்.. இறுதியில் மாணவிக்கு பலாத்காரம் செய்தது பல நாள் டார்ச்சர் தந்த அதே கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்ததையடுத்து, ஏப்ரல் 3-ம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர்.. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஜாமீன் கோரி கவுகாத்தி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.. இது தொர்பான வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடந்து வந்தது..

ஐஐடி வளாகம்
இறுதியில் இது தொடர்பாக ஐஐடி கவுகாத்தியின் நீதிபதி அஜீத் போர்த்தக்கர் கூறும்போது, ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது.. பாதிக்கப்பட்ட மாணவியாகட்டும், குற்றம் சாட்டப்பட்ட மாணவராகட்டும், ரெண்டு பேருமே மாநிலத்தின் எதிர்கால சொத்துக்கள்.. ஐஐடி, கவுகாத்தியில் ஐடிடியில் படிக்கும் திறமையான மாணவர்கள்.. குற்றம் சாட்டப்பட்டவர்களை தொடர்ந்து காவலில் வைத்திருப்பது அவசியமற்றது..

குற்றப்பத்திரிகை
மாணவிக்கு 19 வயது, மாணவருக்கு 21 வயது.. இருவருமே வேறு வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள்... குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள சாட்சிகளின் பட்டியலை ஆராய்ந்து பார்த்தால், குற்றம் சாட்டப்பட்டவர் தங்கள் சான்றுகளை சேதப்படுத்த முடியாது.. அதேபோல, ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களை பாதிக்கும் வாய்ப்பும் இல்லை.. எனவே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ.30,000 பிணைபத்திரத்துடன் ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறேன்" என்றார்.

சொத்து
பாலியல் பலாத்காரம் செய்த மாணவரை, "மாநிலத்தின் எதிர்கால சொத்து" என்று கூறி கவுகாத்தி ஹைகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது... கடந்த 2017, பிப்ரவரியில் ஐஐடி கவுகாத்தி மாணவர்கள் 2 பேர் கவுகாத்தி பல்கலைக்கழக மாணவிகள் 3 பேரை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications