ஐஐடி மாணவர்கள் எல்லாம் பக்கா சுயநலவாதிகள்: கட்ஜு விளாசல்
டெல்லி: ஐஐடியில் படிப்பவர்கள் எல்லாம் சுயநலவாதிகள் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
பாம்பே ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு மாணவர்களிடையே உரையாற்றினார். சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட கட்ஜு கூறியது மாணவ-மாணவிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அவர் பேசுகையில், ஐஐடியில் படிப்பவர்கள் எல்லாம் சரியான சுயநலவாதிகள். அவர்களுக்கு தேசப்பற்று என்பதே கிடையாது. அவர்களுக்கு நாட்டின் மீது உண்மையான அக்கறை இல்லை என்றார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சுயநலம்
ஐஐடி மாணவர்களில் பலருக்கு நாட்டின் மீது உண்மையான பற்று இல்லை. நீங்கள் சரியான சுயநலவாதிகள்.

அமெரிக்கா
உங்களுக்கு அமெரிக்காவுக்கு செல்வது தான் முக்கிய நோக்கம். முதலில் எம்.டெக். படிக்க அமெரிக்கா செல்கிறீர்கள். அதன் பிறகு அங்கேயே செட்டில் ஆகி சொகுசாக வாழ்கிறீர்கள்.

வரி
ஐஐடியில் உங்கள் கல்விக்கு கிடைக்கும் மானியம் இந்தியாவில் வரி செலுத்துபவர்களின் பணம் மூலம் கிடைக்கிறது. உங்கள் கல்விக்கு இந்தியர்களாகிய நாங்கள் பணம் செலுத்திய பிறகு உங்களின் அறிவால் மேம்பாடு அடைய அமெரிக்கா, ஐரோப்பா உங்களை அழைத்துக் கொள்கிறது.

உயர் கல்வி
மேற்கத்திய நாடுகளில் உயர் கல்விக்கு அதிகம் செலவாகும். அப்படி இருக்கையில் மேற்கத்தியர்கள் எங்களின் சிறந்த மூளைகளை எடுத்துக் கொள்கிறார்கள். எங்கள் செலவில் அவர்கள் சேமிக்கிறார்கள்.
|
என்.ஆர்.ஐ.
அமெரிக்காவில் செட்டில் ஆகி நீங்கள் என்.ஆர்.ஐ.க்களாகி விடுகிறீர்கள். உங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என எது நல்லது எது கெட்டது என இந்தியர்களுக்கு கூறுகிறீர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications