தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் வார்னிங்!
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Recommended Video

டெல்லி: தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கினாலும் பல பகுதிகள் கடுமையான வெயிலால் பெரும் அவதியடைந்துள்ளன.
அதேநேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக பல்வேறு பகுதிகள் மழையை பெற்று வருகிறது. வட மாநிலங்கள் அவ்வப்போது பலத்த புழுதி புயலையும் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உ.பி., உத்தரகண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், வித்ர்பா, கொங்கன் மற்றும் கோவா, மத்திய மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, தெலுங்கானா, உள் கர்நாடகா மற்றும் கடலோர ஆந்திரா உள்ளிட்ட பகுதிகள் இடி மின்னல், மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என தெவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் நிக்கோபர் தீவுகள், அசாம், மேகாலயா, நாகாலந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, தெலுங்கானா, ராயலசீமா, கடலோர ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வட மற்றும் மத்திய மாநிலங்கள், மற்றும் மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் வெப்பத்துடன் வறண்ட வானிலை நிலவும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி இந்த பருவமழை காலத்தில் மத்திய இந்திய மாநிலங்கள் இயல்பான மழையை பெறும். கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இயல்புக்கும் குறைவான மழையை பெறும். வட கிழக்கு இந்திய மாநிலங்கள் மிகக்குறைந்தளவு மழையை பெறும்.

நாடு முழுவதும் மாதாந்திர மழைப்பொழிவு ஜூலை மாதத்தில் 101 சதவீதமாக இருக்கும். ஆகஸ்டு மாதத்தில் 94% ஆகவும் இருக்கும். இரு மாதங்களும் 9% மழையளவை கூட்டியோ அல்லா குறைத்தோ பெறும்.
90 % முதல் 96% வரையிலான மழையளவு இயல்பை விட குறைவாகவும், 96% முதல் 104 % வரையிலான மழையளவு இயல்பான அளவு என்றும் கூறப்படுகிறது. 110 % மழை இயல்பை விட அதிகமாகும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications