புது ஆளுநர் வந்தாச்சு.. பதவியேற்க ராஜ்பவன்தான் இல்லை.. புதிய சிக்கலில் ஆந்திரா!
விஜயவாடா: ஆந்திர மாநிலத்திற்கு புதிய ஆளுநராக பாஜக-வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்த பிஸ்வபூஷன் ஹர்சந்தன் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால் ஆந்திராவில் ஆளுநர் மாளிகை இல்லாததால் அவர் ஆளுநராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திற்கு ஈ.எஸ்.எல்.நரசிம்மன் ஆளுநராக பணியாற்றி வந்தார். கடந்த 2014 ம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போதும் நரசிம்மனே ஆளுநராக நீடித்து வந்தார். இந்நிலையில் ஆந்திராவுக்கு புதிய மற்றும் முதல் ஆளுநராக பிஸ்வபூஷன் ஹர்சந்தனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

2014 ம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபோது, ஆந்திராவின் தலைநகராக இருந்த ஹைதராபாத் புதிய மாநிலமான தெலுங்கானாவுக்கு கொடுக்கப்பட்டது. இருப்பினும் அடுத்து வரும் பத்து ஆண்டுகள் ஹைதராபாத்தை இரு மாநிலங்களும் தலைநகராக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த நிலையில்தான் ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி நகரை ஆந்திர தலைநகராக அறிவித்து அங்கு கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இதற்காக கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள உத்தண்டராயனிபாளையம் என்ற இடத்தில் பிரதமர் மோடி தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
புதிய தலைநகரம் 16.9 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் வாழ்வதற்கு ஏற்ற விதத்தில் அமையவேண்டும் என்றும், மின்சாரம், நீர் போன்றவற்றிக்கு தட்டுப்பாடு இல்லாத, மாசு ஏற்படாத தூய்மையான நகராகவும் இந்த பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதுதான் தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் நடைபெற்றது. இதில் சந்திரபாபு வீழ்த்தப்பட்டு ஜெகன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். அமராவதி நகரம் இன்னும் முழுமை அடையாததால் அங்கு ஆளுநர் தங்கும் ராஜ்பவன் கட்டப்படவில்லை.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பிஸ்வபூஷன் ஹர்சந்தன் எங்கு தங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அவர் பதவி ஏற்க உள்ள தேதியும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications