75 வயது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற..10 ஆண்டுகளாக ஆட்டோ டிரைவர் செய்யும் செயல்.. நெகிழ்ச்சி
அமராவதி: வீட்டில் தனிமை வாட்டியதால் என்னை விட்டு பிரிந்து செல்லாதே என்று அம்மா சொன்ன ஒரே வார்த்தைக்காக அவரை ஆட்டோவில் தன்னுடனே 10 ஆண்டுகளாக அழைத்து செல்லும் பாச மகன் குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
அம்மா.. யாருக்கு தான் பிடிக்காது? மகன், மகளாக பிறந்த நாம் அனைவரும் அம்மா மீது அளவுக்கடந்த அன்பு வைத்திருப்போம். பாலூட்டி, சோறுட்டி வளர்த்த அம்மாவை கடைசி வரை கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணமாக உள்ளது.

இதனால் தான் நம்மில் பலரும் அம்மாவின் ஆசைகளை கேட்டு முடிந்தவரை நிறைவேற்ற துடிக்கிறோம். இன்னும் சிலரோ கைநிறைய சம்பாதிக்கும் சமயத்தில் அம்மா பக்கத்தில் இல்லையே என வருத்தங்களை பதிவு செய்வதும் உண்டு.
அதேபோல் மகன் - மகள்கள் மீது அம்மா வைத்திருக்கும் பாசம் கொஞ்சம் கூட குறைவது இல்லை. பிறந்த தேதியில் இருந்தது கடைசி காலம் வரை ஒவ்வொரு தாயும் தனது மகன், மகள் மீது அளவுக்கடந்த அன்பை வைத்துள்ளனர். இந்த அன்பை யாராலும் அளவிட முடியாது. இந்த அன்பு அளப்பரியது.
இந்நிலையில் தான் அம்மா மீது மகனும், மகன் மீது அம்மாவும் வைத்திருக்கும் பாசத்தை பறைசாற்றும் விதமாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. தாயை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் அவரை தன்னுடனே 10 ஆண்டுகளாக ஆட்டோவில் அழைத்து செல்லும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் எர்ணாகுடம் கிராமத்தை சேர்ந்தவர் மசகா கோபி (வயது 52). இவர் கடந்த 1997 ம் ஆண்டில் இருந்தே ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது தாயின் பெயர் சத்யவதி. வயது 75. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சத்யவதி தனது கணவரை இறந்தார். இந்த இழப்பை சத்யவதியால் தாங்க முடியவில்லை. இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.
கணவர் இறந்த நிலையில் மகன் கோபியை அருகே வைத்து கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் அவர்களின் பொருளாதார சூழல் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தினமும் கோபி ஆட்டோ ஓட்டினால் தான் அவர்களின் வீட்டில் உணவு சமைப்பதற்கான உலை கொதிக்கும். இதனால் கோபி தினமும் ஆட்டோ ஓட்டியே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதனால் கோபியை நினைத்து சத்யவதி கவலை கொண்டார். கணவர் தான் தன்னை விட்டு இறந்துவிட்டார். மகன் கோபியும் என்னுடன் இல்லையே.. காலை முதல் இரவு வரை ஆட்டோ ஓட்ட செல்கிறானே என்று கவலை கொண்டார். இதனால் அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை. அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் அவர் பூரண குணமடையவில்லை. தொடர்ந்து மனசோர்வில் இருந்தது.
அப்போது தான் மகன் கோபியிடம், சத்யவதி, ‛‛நான் உன்னுடனே இருக்க வேண்டும்.. எங்கு போனாலும் என்னையும் அழைத்து செல்.. வீட்டில் தனிமையில் இருக்க பிடிக்கவில்லை. உன்னை பற்றிய கவலை அதிகம் இருக்கிறது'' என்று தனது மனதில் இருந்த நீண்டநாள் வேதனையை கூறினார். இதை கேட்டு கண்கலங்கிய கோபி தனது தாய் சத்யவதியை ஆட்டோவில் வைத்தே எங்கும் அழைத்து செல்கிறார்.
ஆஃபர் செல்லும் போதும் கூட கோபி தனது தாய் சத்யவதியை ஆட்டோவில் அழைத்து சென்று வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக மகன் கோபியுடன் ஆட்டோவில் அனைத்து இடங்களுக்கும் பயணித்து வருகிறார் சத்யவதி. மகனை பிரிய கூடாது என நினைக்கும் தாயின் பாசம் ஒருபுறம்.. அம்மாவின் கவலையை போக்க வேண்டும். கடைசி வரை அவரை கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டும் என்ற மகனின் செயல் இன்னொருபுறம் என்று இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications