பீகாரில் பயங்கரம்.. பள்ளியில் புகுந்த கும்பல்.. 34 பேரை பலாத்காரம் செய்ய முயன்ற அட்டகாசம்!

பீகாரில் உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அங்கிருக்கும் மாணவிகளை வன்புணர முயற்சி செய்து தாக்கி இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பள்ளி மாணவிகள் 34 பேரை வன்புணர முயற்சி செய்த இளைஞர்கள்- வீடியோ

    பாட்னா: பீகாரில் உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அங்கிருக்கும் மாணவிகளை வன்புணர முயற்சி செய்து தாக்கி இருக்கிறார்கள்.

    பீகாரின் பாட்னாவில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திரிவேணிகஞ்ச் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அங்கு உள்ள கஸ்தூரிபா தனியார் பெண்கள் பள்ளியில், மர்ம கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்து சிறுமிகளை தாக்கி உள்ளது. இதில் பல சிறுமிகள் மோசமாக காயமடைந்து இருக்கிறார்கள்.

    [2 வருடங்களுக்கு பின் காஷ்மீரில் நகராட்சி தேர்தல்.. இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு!]

    உள்ளே வந்தனர்

    உள்ளே வந்தனர்

    முதலில் நான்கு சிறுவர்கள் அந்த பெண்கள் பள்ளிக்குள் வந்துள்ளனர். ஆசிரியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் அங்கிருந்த ஆசிரியர்களிடமும், மாணவிகளிடமும் தகராறு செய்துள்ளனர். கடைசியாக எல்லோரும் சேர்ந்து அந்த சிறுவர்களை வெளியே அனுப்பி இருக்கிறார்கள்.

    கும்பலாக வந்தனர்

    கும்பலாக வந்தனர்

    இதையடுத்து இரண்டு மணி நேரத்தில் அந்த நான்கு சிறுவர்களும், 50 க்கும் அதிகமான ஆண்களை அழைத்து வந்துள்ளனர். நேரடியாக பள்ளிக்குள் சுவர் ஏறி குதித்து இருக்கிறார்கள். பல ஆண்கள், மாணவிகள் தப்பிக்காத வகையில் கட்டிடத்தை சுற்றி நின்றுள்ளனர்.

    மோசமாக தாக்குதல்

    உள்ளே வந்த இந்த கும்பல் அங்கிருக்கும் சிறுமிகளை மோசமாக தாக்கி உள்ளனர். அதோடு கும்பலாக சேர்ந்து அந்த சிறுமிகளை வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளனர். கடைசியில் ஊர் மக்கள் அந்த பகுதிக்கு வந்தவுடன், அந்த மர்ம கும்பல் அங்கிருந்து ஓடியுள்ளது.

    அனுமதிக்கப்பட்டனர்

    அனுமதிக்கப்பட்டனர்

    இந்த நிலையில் இந்த மாணவிகள் எல்லோரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 34 பேர் மருத்துவமனையில் இருக்கிறார்கள். இதில் 10 பேர் மோசமான உடல்நிலையில் இருப்பதாக தகவல்கள் வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+