பரிதாபத்தில் காங்கிரஸ்.. முன்னேறிய பாஜக.. காஷ்மீரில் ஆட்சியமைப்பது யார்? Matrize Exit Poll ட்விஸ்ட்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. Matrize சார்பில் வெளியிடப்பட்ட கருத்து கணிப்பில் காஷ்மீரில் எந்த கட்சியாலும் தனித்து ஆட்சியை பிடிக்க முடியாது எனவும், காங்கிரஸ் கட்சியை விட பாஜக அதிக இடங்களில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக செயல்பட்டு வந்தது. கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. அதன்பிறகு 10 ஆண்டுகளாக சட்டசபை தேர்தல் நடைபெறாமல் இருந்தது. தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமான பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இங்கு மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும். மொத்தம் 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கு 3வது கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்தனியே களமிறங்கி உள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் தேர்தலை பொறுத்தவரை மும்முனை போட்டி என்பது நிலவி வருகிறது. 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அக்டோபர் 8 ம்தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினம் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் Matrize சார்பில் வெளியான கருத்து கணிப்பில் யாருக்கும் தனித்து ஆட்சியை பிடிப்பதற்கான தனி மெஜாரிட்டி கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 28 தொகுதிகளிலும், அதற்கு அடுத்தப்படியாக பாஜக 25 தொகுதிகளிலும், பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி 15 தொகுதிகளிலம், காங்கிரஸ் 12 இடங்களிலும், மற்றவர்கள் 7 இடங்களிலும் வெல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் காஷ்மீரில் புதிய ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்படும்.
ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியில் இருந்தாலும் கூட அந்த கட்சிகளுக்கு 12 + 15 என்று மொத்தம் 27 தொகுதிகள் தான் கிடைக்கும். ஆனால் ஆட்சியை பிடிக்க 46 எம்எல்ஏக்கள் வேண்டும். இவர்களுடன் மெகபூபா முப்தி சேரும் பட்சத்தில் கூடுதலாக 28 இடங்கள் கிடைக்கும். இதன்மூலம் பாஜகவை விலக்கி வைத்து 3 கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
இல்லாவிட்டால் கடந்த 2014ம் ஆண்டை போல் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சியும், பாஜகவும் மீண்டும் கூட்டணி வைக்கலாம். இப்படி கூட்டணி வைக்கும்போது இந்த கருத்து கணிப்பின்படி பிடிபி கட்சியின் 28 எம்எல்ஏக்கள், பாஜகவின் 25 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 53 எம்எல்ஏக்கள் இருப்பார்கள். இது மெஜாரிட்டியான 46யை விட அதிகம். இதனால் காஷ்மீரில் புதிய ஆட்சி அமைவதில் சிக்கல் உள்ளது. தொங்கு சட்டசபையால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை பொறுத்தே ஆட்சி அமையும் என்று Matrize கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications