சார்... இரவில் தூக்கம் வரவில்லை... சூனியம் வைத்தவனை கண்டுபிடியுங்க... போலீசில் புகாரளித்த வாலிபர்
ஹாவேரி: ‛‛சார்... இரவில் உடல் பயங்கரமா வலிக்குது. தூக்கம் வரமாட்டுது. எவனோ எனக்கு சூனியம் வைச்சுட்டான். அவனை கண்டுபிடித்து சிறையில் அடையுங்கள்'' என்ன இதுவென்று யோசிக்கிறீர்களா... இதுதான் கர்நாடக மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் 30 வயது வாலிபர் கொடுத்த புகாரின் அம்சங்களாகும்.
திருட்டு, கொள்ளை, வழிப்பறி, கொலை நடந்ததை கண்டுபிடியுங்கள் என பலர் போலீஸ் நிலையம் சென்று புகார் அளிப்பது வழக்கம். ஆனால் தமிழ் படம் ஒன்றில் நடிகர் வடிவேலு கிணற்றை காணவில்லை என போலீசில் புகார் செய்வார். இந்த காமெடி நல்ல பிரபலமான நிலையில் அதேபோல் பலர் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து வந்திருப்பதை நாம் கேட்டுள்ளோம்.
ஆனால் கர்நாடகத்தில் ஒருவர் தனக்கு தூக்கம் வரவில்லை. யாரோ சூனியம் வைத்துவிட்டனர். சூனியக்காரர்களை கண்டுப்பிடித்து சிறையில் தள்ளுங்கள் என போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

வாலிபரின் அவஸ்தை
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா கால்வேகல்லாபுரா கிராமத்தை சேர்ந்தவர் வீரய்யா ஹிரேமட். இவரது வயது 30. பியூசி வரை படித்துள்ள இவர் கடந்த சில நாட்களாக இரவில் தூக்கம் இன்றி தவித்து வருகிறார். மேலும் அவருக்கு இரவில் கால், கை உள்பட உடல் வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் சிரமப்பட்டு வந்தார்.

டாக்டர்களிடம் பரிசோதனை
உடலில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம் என அவர் நினைத்தார். இதனால் அவர் ஹாவேரி, சிக்காம், உப்பள்ளி, மணிப்பால் மருத்துவமனைகளுக்கு சென்றார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அவரது உடலில் எந்த பிரச்சனையும் இல்லாதது தெரியவந்தது. மேலும் பிரச்சனை எதுவும் இல்லை என அவரிடம் டாக்டர்கள் கூறினர்.

சூனியம் வைத்ததாக...
இருப்பினும் வீடு திரும்பிய வீரய்யா ஹிரேமட்டுக்கு தூக்கம் மட்டும் வரவில்லை. இதனால் அவர் பலரிடம் யோசனைகளை கேட்டார். அப்போது ஒருவர், ‛உனக்கு சூனியம் வைத்துள்ளனர். இதனால் தான் தொடர்ச்சியாக வலியால் தூக்கமின்றி தவிக்கிறாய்'' என கூறினர். இதையடுத்து சில ஜோதிடர்களிடம் அவர் அழைத்து செல்லப்பட்டார்.

போலீசில் புகார்
இந்நிலையில் தான் வீரய்யா ஹிரேமட் அடூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‛‛எனக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள். இதனால் இரவில் தூக்கம் வராமல் துன்பப்படுகிறேன். உடல் வலி ஏற்படுகிறது. மேலும் ஆவி என் உடலில் நுழைகிறது. இதனால் சிரமப்பட்டு வருகிறேன். சூனியம் வைத்த நபரை கண்டுபிடித்து சிறையில் அடையுங்கள்'' என கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு போலீசார் அறிவுறுத்தி அனுப்பினர்

‛ஸ்கிசோப்ரினியா’
வீரய்யாவின் இந்த பாதிப்பு குறித்து மனநல மருத்துவரிடம் கேட்டால் வேறுவிதமாக கூறுகிறார்கள். அதாவது வீரய்யா குழப்பமான மனநிலையில் உள்ளார். இதை மருத்துவ மொழியில் ‛ஸ்கிசோப்ரினியா' என்பவர். இது தீர்க்க முடியாத பிரச்சனை இல்லை. மனநல டாக்டர்களின் ஆலோசனைகள் மூலம் தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளனர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications