ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!
சென்னை: ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து - ரீல் விட்டு ஆட்சியைத் தொடரலாம் என்ற முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பகல் கனவு இனி பலிக்காது எனவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் மக்கள் நலன் சார்ந்த அவசர பிரச்சினைகளுக்கு 6 மாத கால அவகாசம் பொருந்தாது என்பது தெரியாதா? என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நேற்று திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில், மக்களின் நலத்திட்டங்கள் குறித்தோ, கடந்த மூன்று வாரங்களாக அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தோ முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில் அவரது சினிமா வசனங்களும், அடுக்குமொழி பேச்சுகளும், பொதுமக்களுக்கும் அளித்துள்ளன.

விவசாயிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தையே அரசு நிர்வாகத்தைச் சீரமைக்க ஆறு மாத கால அவகாசம் தேவை எனக் கோரும் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு, கொலை-கொள்ளை, லஞ்சம் கேட்டு மிரட்டுதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம், மருத்துவமனைகளில் நிலவும் அவலங்கள் போன்ற சட்டம்-ஒழுங்கு மற்றும் மக்கள் நலன் சார்ந்த அவசர பிரச்சினைகளுக்கு அந்தக் கால அவகாசம் பொருந்தாது என்பது தெரியாதா? தவெகவுக்காக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் கூட இன்று நியூஸ் பார்க்கும் நிலையில் உள்ளார்கள் என்று கூறும் திரு ஜோசப் விஜய் அவர்கள் ஒவ்வொரு நாளும் சந்தி சிரித்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் அந்த நியூஸ்களில் வருவதை பார்ப்பதில்லையோ என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுகிறது.
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், குறு மற்றும் சிறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முந்தைய அரசுகள் விட்டுச் சென்ற கடன் சுமையைக் காரணம் காட்டி அரைகுறையாகத் திட்டங்களைச் செயல்படுத்தி, பொதுமக்களையும் விவசாயிகளையும் வஞ்சித்து வருகிறார்.
தேர்தலுக்கு முன்பே தமிழகத்தின் கடன் சுமை சுமார் பத்து லட்சம் கோடி ரூபாயாக இருப்பது தெரிந்திருந்தும், அதைக் கருத்தில் கொள்ளாமல் நடைமுறைக்குச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் என்ன செய்ய முடியுமோ? அதைத்தான் செய்ததாகக் கூறியுள்ள முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், தனது சுய விளம்பரத்திற்காக மட்டுமே அறிவித்த இந்த விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பைப் பார்க்கும் போது, வரும் காலங்களில் இவர் எந்த லட்சணத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது என விவசாயிகள் வேதனையைத் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், அல்லு சில்லுகளின் ஆதரவோடு தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டு, அது போதாது என தீர்ந்த சக்திகள், மற்றும் பலரின் சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேர அரசியலைக் கையாண்டு, அவர்களில் சிலரை ராஜினாமா செய்ய வைத்ததோடு அவர்கள் அனைவரையும் சட்ட சிக்கலில் நிறுத்தியிருப்பதை என்னவென்று சொல்ல? இது தூய சக்தி அரசியலா? அல்லது குதிரை பேர அரசியலா?
ஆகவே, கடந்த ஆட்சியாளர்கள் வாங்கிய கடனையும், நிர்வாக சீர்கேடுகளையுமே காரணங்களாக அடுக்கி, தனது ஆட்சியை நிறைவு செய்து விடலாம் என நினைத்தால் இந்த ஆட்சியாளர்களின் போலி தூய சக்தி வேடத்தை தாங்களாகவே கலைக்கும் முன்னர், மக்கள் கலைத்துவிடுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications