மத்தியப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120; டீசல் விலை ரூ.110; தலைசுற்ற வைக்கும் விலை உயர்வு
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் போக்குவரத்துக் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்து வரும் நிலையில், எதிர்க்கட்சியினர் விலை குறைப்பை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நாட்டிலேயே எங்கும் இல்லாத வகையில் மத்தியப் பிரதேசம் மாநிலம் அனுபூர், பால்காட் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட தூரத்திலிருந்து இந்த மாவட்டங்களுக்கு எரிபொருள் கொண்டு வர வேண்டியுள்ளதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது எனக் காரணம் கூறப்படுகிறது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.116-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.106-க்கும் விற்பனை செய்யப்படுவது கவனிக்கத்தக்கது. போகிற போக்கை பார்த்தால் தமிழகத்திலும் இத்தகைய விலை உயர்வு விரைவில் வந்துவிடும் எனத் தெரிகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9.48 ஆக இருந்த கலால் வரி தற்போது ரூ.32.90 ஆகவும், ரூ.3.56 -ல் இருந்து ஒரு லிட்டர் டீசலுக்கான கலால் வரி ரூ.31.80 ஆகவும் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 15 முறைக்கும் மேல் முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் இன்றைய மத்தியப்பிரதேசத்தின் நிலை நாளை தமிழகத்திற்கும் வரலாம். இதனிடையே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் எரிபொருள் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் குரல் குடுத்து வருகிறது.
பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.120-க்கு விற்கப்படும் மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருவதும் அம்மாநிலத்தின் முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் சவுகான் இருப்பதும் கவனிக்கத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications