முதலிரவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கன்னித்தன்மை சோதனை என கணவரின் குடும்பம் செய்த செயல்.. ஷாக்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் முதலிரவில் பெண்ணின் கன்னித்தன்மையை பரிசோதிப்பதாக கூறி கணவரின் குடும்பத்தினர் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநில இந்தூரை சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணமாகும்போது பெண்களுக்கு இருக்கும் பயம், பதற்றத்துடனே கணவர் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் அந்த பெண்.

ஆனாலும் கூட திருமண வாழ்க்கையை இனிமையாக அமையும். தனக்கென்று புதிய உறவுகள் கிடைத்துள்ளது. கணவர் மற்றும் அவரது குடும்பம் இனி நம்மை பாதுகாப்பாக பார்த்து கொள்ளும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது.
ஆனால் திருமண வாழ்க்கை என்பது அந்த பெண்ணுக்கு சரியாக அமையவில்லை. தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அதாவது திருமணமான 3 மாதத்தில் அந்த பெண்ணின் கரு கலைந்தது. அதன்பிறகு மீண்டும் அந்த பெண் கர்ப்பமானார். பிறகு 9 மாதத்தில் இறந்த நிலையில் குழந்தை பிறந்தது. இதனால் 2வது முறையாக அவரது வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டது. இருப்பினும் அவர் மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
தற்போது அந்த பெண், தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் அந்த பெண் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது முதலிரவில் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார். முதலிரவின்போது தனது கன்னித்தன்மையை பரிசோதிக்க கணவரின் குடும்பத்தினர் முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அந்த பெண், ‛‛முதலிரவின்போது எனது கன்னித்தன்மையை பரிசோதிக்க எனது கணவரின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக நடைமுறைக்கு சாத்தியமற்ற செயல்களை செய்தனர். இதனால் தான் மனதளவிலும், உடலளவிலும் பிரச்சனைகளை எதிர்கொண்டேன்’’ என்று இந்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த இந்தூர் நீதிமன்றம் கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்ய தயாராகி உள்ளனர். மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை கன்னித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் துன்புறுத்தியதாக ஒரு பெண் நீதிமன்றத்தை அணுகி இருப்பது இதுதான் முதல் முறையாகும்.
முன்னதாக இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரித்து ரகசிய அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் முதலிரவின்போது கன்னித்தன்மை பரிசோதனை என்ற பெயரில் அந்த பெண்ணுக்கு கணவரின் குடும்பத்தினர் சார்பில் தொல்லை அளிக்கப்பட்டது பற்றிய விபரங்கள் கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து தான் சம்பவம் தொடர்பாக கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications