மணிப்பூரில் மீண்டும் பயங்கர மோதல்.. துப்பாக்கி சண்டையில் 13 பேர் சுட்டுக்கொலை.. பெரும் பதற்றம்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆயுதக்குழுவினர் பயங்கரமாக மோதிக்கொண்டதில் 13 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பைரன் சிங் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தான் மைத்தேயி-குக்கி இன மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் என்பது 3 மாதங்களை கடந்து நடந்தது. 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதோடு 200க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் ஏராளமான வீடு, கடைகள் தீக்கிரையாகின. பல ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலத்தில் தஞ்சமடைந்தனர். இதற்கிடையே தான் கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் வன்முறை என்பது குறைந்து மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது மணிப்பூரில் மீண்டும் ஒரு பெரிய மோதல் நடந்துள்ளது. அதாவது மணிப்பூர் மாநிலம் டெங்பால் மாவட்டம் சைபால் பகுதியில் உள்ள லெய்து கிராமம் என்பது மியான்மர் எல்லையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மியான்மர் எல்லை என்பது 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு படையின் முகாம் ஒன்று உள்ளது.
இந்நிலையில் தான் நேற்று நேற்று இரு ஆயுதக்குழுக்களுக்கு இடையே லெய்து கிராமத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். ஆனால் அங்கு மோதலில் ஈடுபட்டவர்கள் மாயமாகி இருந்தனர். ஆனால் 13 பேரின் உடல்கள் அங்கு கிடந்தன. அவர்களின் உடல்களில் குண்டு காயங்கள் இருந்தன. துப்பாக்கிச்சண்டையில் அவர்கள் பலியாகி இருந்தது தெரியவந்தது.
இந்த உடல்களை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இறந்தவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? அவர்களின் விபரம் எதுவும் தெரியவில்லை. இருப்பினும் இறந்தவர்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வரும் பிஎல்ஏ குழுவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
சில நாட்களுக்கு முன்பு தான் மத்திய அரசு முன்னிலையில் மணிப்பூர் அரசுக்கும், அங்கு ஆயுதம் ஏந்தி போராடிய யூஎன்எல்எப் குழுவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் தான் தற்போது இப்படியொரு மோதல் ஏற்பட்டு 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மணிப்பூரில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications