விவாகரத்து கேட்ட மனைவியை 32 முறை கத்தியால் குத்திக் கொன்ற கொடூர கணவன் !!
மும்பை : விவாகரத்து கேட்டு மனைவி சண்டை போட்டதால் அவரது கணவன் 32 முறை கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.
மும்பை அந்தேரி டி.என்.நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேஷ் நாராயணன். அவரது மனைவி ரித்து. இருவரும் வெவ்வேறு கால் சென்டர்களில் வேலை செய்து வந்தனர். காதல் திருமணம் செய்துகொண்ட இவர்கள் இருவரும், வேறு சில நண்பர்களுடனும் பழகி வந்துள்ளனர். இது இருவருக்கிடையே உள்ள நெருக்கத்தை குறைத்து பிரச்சினையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி ரித்துவை கொலை செய்த ராஜேஷ் நாராயணன் தற்கொலை செய்வதற்காக வஷி பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.
முன்னதாக, தான் செய்த குற்றத்தை காவல்துறைக்கு தெரிவித்துள்ளார். ஆனால், பாலத்தில் இருந்து குதித்து தண்ணீரில் தத்தளித்த அவரை மீனவர்கள் காப்பாற்றினர்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் காவலில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரித்து வேறு ஒரு நபருடன் பழகி வந்ததை ஆரம்பத்திலேயே ராஜேஷ் கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டுக்கு வராமல் நண்பர் வீட்டிலேயே ரித்து தங்கத் தொடங்கியிருக்கிறார்.
வீட்டிற்கு வர மறுத்த ரித்துவை சாலையிலேயே ராஜேஷ் அடித்துள்ளார். பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட, போலீசார் கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் பிரச்சினைக்கு முடிவு கட்டும் எண்ணத்தில் 9 ஆம் தேதி வீட்டுக்கு வந்த ரித்து, தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்காக முறைப்படி விவாரத்து பெற்றுக்கொண்டு இருவரும் பிரிந்துவிடலாம் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் அவரை கடுமையாகத் திட்டியுள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ரித்துவின் துப்பட்டாவால் அவரது வாயைக் கட்ட முயன்றுள்ளார் ராஜேஷ்.
அப்போது அவரது கையை ரித்து கடித்ததில் அவரது விரல் எலும்பு முறிந்துள்ளது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த ராஜேஷ், ரித்துவை 32 முறை கத்தியால் குத்தி சாய்த்து குளியலறையில் போட்டு பூட்டியுள்ளார்.
பின்னர் 7 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு ராஜேஷ் தற்கொலைக்கு முயன்றபோது தான் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, இப்போது போலீஸ் காவலில் உள்ளார்.












Click it and Unblock the Notifications