ஸ்ரீநகர் வாலிபரின் திருமணத்திற்கு வில்லனாக மாறிய வெள்ளம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஞாயிற்றுக்கிழமை நடக்க வேண்டி இருந்த ஒருவரின் திருமணம் நின்றுவிட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வெள்ளத்திற்கு இதுவரை 170 பேர் பலியாகியுள்ளனர். ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் சாலைகளில் 6 அடிக்கு தண்ணீர் ஓடுகிறது. இதனால் மக்கள் வீடுகளின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஜீலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீநகரும் தத்தளிக்கிறது.

ஸ்ரீநகரைச் சேர்ந்த ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் வெள்ளப்பெருக்கால் திருமணம் நின்றுவிட்டது.

இது குறித்து அந்த வாலிபர் கூறுகையில்,

அனைத்தையும் இழந்துவிட்டோம். எங்கள் பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கிவிட்டன. தற்போது எங்களிடம் எதுவுமே இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+