தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி
தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்விடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் செல்ல உள்ளார்.
எப்படி நடந்தது இந்த விபத்து?
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் மக்கள் தேர் வடம்பிடித்து இழுத்து வந்தனர். அப்போது அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது தேர் உரசியதாகத் தெரிகிறது.
இதனால் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில், நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
- ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அதிக பணம் கேட்டதால் 10 வயது மகனின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற தந்தை
- இரு கோவிட் தடுப்பூசிகளை 12 வயதுக்கு குறைந்த சிறாருக்குப் பயன்படுத்த இந்தியாவில் அனுமதி
இறந்தவர்கள் யார் யார்?
தற்போது இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. மோகன் (22), பிரதாப் (36), ராகவன் (24), அன்பழகன் (60), நாகராஜ் (60), சந்தோஷ் (15), செல்வம் (56), ராஜ்குமார் (14), சுவாமிநாதன் (56), கோவிந்தராஜ் (45), பரணிதரன் (13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்கு காரணம் என்ன?
தேர் திருவிழாவின் போது தேரை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்ததாகவும் அதனால் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரைவிட்டு தள்ளி நின்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை தண்ணீர் இல்லாமல் இருந்திருந்தால் அனைவருமே தேர் அருகிலேயே இருந்திருப்பார்கள், இன்னும் பெரிய உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தை அடுத்து மருத்துவமனைக்கு சென்று மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் மின்சார கம்பிகள் முறையாக மாற்றி அமைக்கப்படாததே தேர் விபத்துக்குக் காரணம் என அக்கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விபத்து தொடர்பாக தஞ்சை தீயணைப்பு அதிகாரி (பொறுப்பு) பானுப்பிரியா கூறுகையில், "தேரை வளைவில் திருப்பும்போது தேருடன் இருந்த ஜெனரேட்டர் சிக்கியுள்ளது.
ஜெனரேட்டரை சரிசெய்யும்போது தேரின் உச்சி, அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
தஞ்சை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
இந்நிலையில், விபத்து நடந்த பகுதியை நேரில் ஆய்வு செய்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தஞ்சாவூர் செல்கிறார். இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
காலை 11.30 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் செல்லவுள்ளார்.
ஏற்கெனவே, சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை மண்டல ஐஜி ஆகியோர் நேரில் ஆய்வு செய்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூர் சென்றுள்ளார்.
https://www.youtube.com/watch?v=g9beghuOktg
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது















Click it and Unblock the Notifications