பதற வைக்கும் பரபரப்பு விபத்து.. எகிறி விழுந்த பெற்றோர்.. குழந்தையுடன் பறந்த பைக்!- அதிர்ச்சி வீடியோ
Recommended Video

பெங்களூர்: இரு பைக்குகள் பயங்கரமாக மோதிய விபத்தில் தர தரவென இழுத்து செல்லப்பட்ட 5 வயது காயமின்றி உயிர் தப்பிய அதிர்ச்சி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பெங்களூர்- தும்கூர் நெடுஞ்சாலையில் ஒரு தம்பதி தங்களது 5 வயது குழந்தையுடன் பைக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதியது.
இதில் பெற்றோர் தூக்கி வீசப்பட்டனர். ஆனால் முன்பக்கம் அமர்ந்திருந்த குழந்தையுடன் அந்த பைக் மற்ற வாகனங்களுக்கு மத்தியில் நுழைந்து நிற்காமல் சென்று கொண்டே இருந்தது.

புல்வெளியில் குழந்தை
குறுகலான இடத்தில் வந்த லாரி மீது அந்த பைக் மோதவில்லை. பின்னர் 300 மீட்டர் தூரத்தில் அதன் இயக்கத்தின் வேகம் குறைந்து சாலையின் நடுபக்க தடுப்புச் சுவரின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குழந்தை சுவரில் இருந்த புல்வெளியில் சென்று விழுந்தது.

பெற்றோர் காயம்
இதையடுத்து அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் ஓடிசென்று குழந்தையை பார்த்தனர். ஒரு கீறல் கூட இல்லாமல் உயிர் தப்பியது. எனினும் குழந்தையின் பெற்றோர் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

விபத்துக்கு காரணம்
இதுதொடர்பான வீடியோவை அங்கிருந்து இந்த சம்பவம் முழுவதையும் பார்வையிட்ட டிராபிக் காவலர் சமூக வலைதளங்களில் அனுப்பியுள்ளார். அத்துடன் அதிவேகம், ஹெல்மெட் அணியாத குழந்தையின் தந்தை, செல்போன் பேசியபடி பயணம் ஆகியவையே இந்த விபத்துக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல்
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் சாவில் இருந்து பிழைத்தவர்களே விபத்துக்கான காரணம் என்னவெனில் அதிவேகம், ஹெல்மெட் இல்லை, மற்ற வாகனத்தை இடது புறம் இருந்து முந்தியது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது ஆகும்.

பெற்றோருக்கு அறிவுரை
உங்கள் தவறுக்கு உங்கள் குழந்தை ஏன் அதற்குரிய விலையை கொடுக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக குழந்தை காயமின்றி மீட்கப்பட்டது. இதுபோன்ற அதிசயங்கள் எப்போது நடக்காது என்று அறிவுறுத்தியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications