For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருமான வரி கணக்கு தாக்கலில் தவறான தகவல்கள்.. சம்பளதாரர்களுக்கு ஐ.டி எச்சரிக்கை!

சலுகைகளை பெற ஆலோசகர்களின் பேச்சைக் கேட்டு தவறான தகவல்களை சம்பளதாரர்கள் பதிவு செய்து வருவதாக வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    வருமான வரி கணக்கு தாக்கலில் தவறான தகவல்கள்..வீடியோ

    பெங்களூரு : வருமான வரித்துறை நேற்றைய தினம் சம்பளதார்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி வருமான வரி கணக்கு தாக்கலின் போது தவறான தகவல்களை அளிக்கும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    பெங்களூரில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் ப்ராசசிங் மையம் வருமான வரி கணக்கு தாக்கல் ஆவணங்களை பெற்று சரிபார்த்து வருகிறது. இந்த நிறுவனம் அளித்துள்ள தகவலின் படி சில வரி கட்ட வேண்டிய சம்பளதாரர்கள் கூட சலுகைகள் பெறுவதற்காக வரி ஆலோசகர்களின் ஆலோசனையை கேட்டு தவறான தகவல்களை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    Income tax department warns salaried taxpayers against filing inaccurate returns for tax benefit

    இது ஒரு எச்சரிக்கை என்று வருமானத்திற்கு ஏற்ப வரி கணக்கை காட்டாமல் வரி ஏய்ப்பு செய்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்படும். இது போன்ற குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டியவை வருமான வரி சட்டத்தின் கீழ் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

    பெங்களூரைச் சேர்ந்த பெல்வெதர் தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைக் கேட்டு கடந்த ஜனவரி மாதத்தில் வரி ரீபண்ட் கோரிய போது சம்பளதாரர்களின் ஏமாற்று வேலைகள் அம்பலமாகியுள்ளன. வரி ரீபண்ட் கோரியவர்கள் மீது சிபிஐ அண்மையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    English summary
    Income Tax department warned salaried taxpayers should not submit wrong informations to unscrupulous advisors or planners who help them in preparing wrong claims to get tax benefits
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X