டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து டெல்லி, மும்பை, சண்டீகர் உள்ளிட்ட பெரு நகரங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கருப்பு பணம், கள்ள பணத்தை ஒழிக்கும் நோக்கில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பு நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே வருமானத்திற்கு அதிகமான பணம் வங்கி கணக்கில் செலுத்தினால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை அடுத்து வருமான வரித்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் சாந்தினி சவுக், கரோல் பாக் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மும்பையில் மூன்று இடங்களிலும், சண்டீகரிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கருப்பு பணம், ஹவாலா பண புழக்கத்தை கண்காணிக்க இந்த சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications